செய்திகள் :

EICMA 2024: `இன்டர்செப்டர் 650 பைக்கின் அடுத்த வெர்ஷன்’ - அசத்தலான ராயல் என்ஃபீல்டு Bear 650

post image

நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் நம் ஊர் நிறுவனங்கள் பல தங்களுடைய வாகனங்களை ரிவீல், லாஞ்ச் செய்து கலக்கி வருகின்றன. 

EICMA 2024

ராயல் என்ஃபீல்டு பியர் 650

C6 எலெக்ட்ரிக்கைத் தொடர்ந்து பியர் 650 என்றொரு 650 சிசி பைக்கை 3.39 லட்ச ரூபாய் விலைக்கு லாஞ்ச் செய்திருக்கிறது. இன்டர்செப்டர் 650 பைக்கின் அடுத்த வெர்ஷன் என்று இதைச் சொல்லலாம். இது ஒரு ஸ்க்ராம்ப்ளர் வகை பைக். இதன் டாப் எண்ட் Two Four Nine என்கிற வேரியன்ட் 3.59 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலை வருகிறது. 

Royal Enfield Bear 650

முன் பக்கம் 19 இன்ச், பின் பக்கம் 17 இன்ச் வீல் செட்அப், Showa யுஎஸ்டி ஃபோர்க்குகள், பின் பக்கம் புதிய டூயல் ஷாக் அப்ஸார்பர்கள், 130 / 115 மிமீ முன் மற்றும் பின் பக்க சஸ்பென்ஷன் டிராவல், 830 மிமீ சீட் உயரம், 184 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 216 கிலோ கெர்ப் எடை, டூயல் சேனல் ஏபிஎஸ், 648 சிசி பேரரல் ட்வின் இன்ஜின் செட்அப், 47hp மற்றும் 56.5Nm டார்க், ஸ்டைலான Two-into-One எக்ஸாஸ்ட் சிஸ்டம், கரீல்லா மற்றும் ஹிமாலயன் பைக்குகளில் உள்ள வட்ட வடிவ டிஎஃப்டி டிஸ்ப்ளே என்று ஏகப்பட்ட விஷயங்களுடன் வரும் இந்த பியர் 650, மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் வரப் போகிறது. இதன் புக்கிங் நவம்பர் 10-ல் இருந்து தொடங்கும்.

Royal Enfield Bear 650
Royal Enfield Bear 650
Royal Enfield Bear 650
Royal Enfield Bear 650
Royal Enfield Bear 650
Royal Enfield Bear 650
Royal Enfield Bear 650
Royal Enfield Bear 650

RapteeHV: `எலெக்ட்ரிக் கார் பிளக் மூலம் பைக் சார்ஜ்; புதுமைகள் பல கொண்ட T30’ - என்ன ஸ்பெஷல்?

RapteeHV T30 Electric Bike | Jayapradeep Vasudevan - Raptee.HVஎலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களுக்கான மார்க்கெட் விரிவடைகிற சூழலில் புதிய ஸ்டார்ட்-அப்கள் புதுபுது சாத்தியங்களோடு களமிறங்குகின்றன. அவற்றில... மேலும் பார்க்க

Hero Vida Z: அட்டகாச லுக்கில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... நம்ம ஊருக்கு எப்போ வரும் தெரியுமா? | EICMA

EICMA ஷோவில் ஹோண்டா ஆக்டிவாவை அறிமுகப்படுத்தி அதகளம் செய்தது மாதிரி, ஹீரோ மோட்டோ கார்ப்பும் தன் பங்குக்கு விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் Z எனும் மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது.இதை ‛இஸட்’ என்று சொல... மேலும் பார்க்க

Aprilia Tuono 457: `ஏப்ரிலியா என்றாலே தரம்தான்’ - அடுத்த வருஷம் இந்தியாவுக்கு வருது Tuono 457| EICMA

நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றி... மேலும் பார்க்க

Hero Karizma XMR 250: செமயான ஸ்போர்ட்டி பைக் வரப் போகுது - ஹீரோ கரீஸ்மா XMR 250 | EICMA

நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றி... மேலும் பார்க்க

Hero Xpulse 210: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210-ல் `அட்வென்ச்சர் விரும்பிகள்' கேட்ட சூப்பர் வசதி! | EICMA 2024

EICMA ஷோவில் ஹீரோவும் தன் அதகளத்தைக் காட்டிவிட்டது. எக்ஸ்பல்ஸ் 200 பைக்கைப் பார்த்தாலே யாருக்கும் ராலியிலோ அல்லது ஏதாவது அட்வென்ச்சர் பந்தயத்திலோ கலந்து கொள்ள வேண்டும்போல் சட்டெனத் தோன்றும்.EIC... மேலும் பார்க்க

KTM 390 Adventure R: `வெறித்தனமான ஆஃப்ரோடு அம்சங்கள்..!’ - கேடிஎம் 390 அட்வென்ச்சர் R | EICMA 2024

நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றி... மேலும் பார்க்க