செய்திகள் :

Fengal: ஊட்டி வரை எதிரொலித்த ஃபெஞ்சலின் தாக்கம் - மலை ரயில் ரத்து; கடும் பனி மூட்டம்; தொடரும்‌ மழை

post image

புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயலின் தாக்கம் நீலகிரி மாவட்டம் எதிரொலித்து வருகிறது. நேற்று முன்தினம் முதலே நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடுமையான பனி மூட்டம் சூழ தொடங்கியது. சில பகுதிகளில் மழை பெய்து வந்தது.

ஊட்டி மழை

4 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகைத் தந்திருந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக திருவாரூர் பயணத்தை ரத்து செய்து விட்டு நேற்று முன்தினமே டெல்லி திரும்பினார். ஊட்டியில் நிலவிய கடுமையான பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் மூலம் பயணிக்க முடியாமல் சாலை மார்க்கமாகவே கோவை விமான நிலையத்தை அடைந்தார்.

ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முழுவதும் பனி மூட்டம் தொடர்ந்த‌ நிலையில், நள்ளிரவு முதல் கனமழை தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. மழையின் தீவிரம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் ஆகிய தாலுகாகளுக்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீலகிரி மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி மழை

மாவட்டத்தில் பரவலாக தொடர் மழையுடன் கடுமையான பனி மூட்டமும் நிலவுவதால் மலைப்பாதைகளில் கூடுதல் கவனத்துடன் வாகனங்களை இயக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மழை தொடர்ந்தால் மண் சரிவு மற்றும் மரங்கள் பெயர்ந்து விழும் அபாயம் இருப்பதால் ஆபத்தான இடங்களில் நடமாடுவதை உள்ளுர் மக்களும் சுற்றுலா பயணிகளும் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்திப்பட்டுள்ளது.

இதனிடையே ஊட்டியில் கன மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஊட்டியில் கன மழை காரணமாக நேற்றிரவு முதல் பெய்து வரும் கன மழை காரணமாக, நொண்டிமேடு பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்து ஆறுமுகம் (43) என்பவர் உயிரிழந்தார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

Rain Alert : இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகும், தமிழ்நாட்டில் மழை இன்னும் விட்டபாடில்லை.நேற்று வானிலை மையம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திரு... மேலும் பார்க்க

Fengal Cyclone: கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மழை; புதுச்சேரியைப் புரட்டிய புயல் | பாதிப்பு வீடியோக்கள்

புதுச்சேரி கிருஷ்ணா நகர் பகுதியில் பொதுமக்களை ராணுவத்தினர் மீட்டு படகில் கொண்டு செல்கின்றனர்ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்... மேலும் பார்க்க

Fengal Cyclone: கரையைக் கடந்து புதுச்சேரியில் நிலைகொண்ட புயல்; 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு 11:30 மணியளவில் கரையைக் கடந்தது. இந்த நிலையில், கரையைக் கடந்த புயல் தற்போது புதுச்சேரியில் நிலைகொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்... மேலும் பார்க்க