செய்திகள் :

Gambhir: 'இந்தியாவை விமர்சிக்க பாண்டிங் யார்?!' - கம்பீரின் கோபம் நியாயமானதா?

post image
ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்வதற்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளார் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அதில் ரிக்கி பாண்டிங் முன்வைத்த ஒரு விமர்சனம் பற்றிய கேள்விக்கு கம்பீர் அளித்த பதில் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'இந்திய கிரிக்கெட்டைப் பற்றி பேச நீங்கள் யார்?' எனும் அர்த்தம் தொனிக்கும் வகையில் கம்பீர் பேசியிருக்கிறார். கம்பீரின் இந்த பதில் நியாயமா என்பதுதான் இப்போதைய வாதம்.
Gambhir

'கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலி 2-3 சதங்களை மட்டுமே அடித்திருப்பதாக ஒரு புள்ளி விவரத்தை பார்த்தேன். அந்தப் புள்ளிவிவரம் எனக்கு சரியானதாகப் படவில்லை. ஒருவேளை அந்த புள்ளிவிவரம் சரிதான் எனில் கோலியின் ஃபார்ம் இந்தியாவுக்கு கவனிக்கத்கக்க விஷயமாகவே இருக்கும்.' என சில நாட்களுக்கு முன்பு ரிக்கி பாண்டிங் பேசியிருந்தார்.

இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் இதைத்தான் ஒரு பத்திரிகையாளர், ரிக்கிபாண்டிங் இப்படி கூறியிருக்கிறாரே என கேள்வியாக முன்வைத்தார். அதற்கு கம்பீர், 'இந்திய கிரிக்கெட்டில் பாண்டிங்கிற்கு என்ன வேலை? பாண்டிங் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டைப் பற்றி யோசித்தால் போதும் என நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு கோலி மற்றும் ரோஹித்தின் ஃபார்ம் பற்றி எந்த கவலையும் இல்லை.' என தடாலடியாக பதில் கொடுத்திருந்தார்.

ரிக்கி பாண்டிங் இங்கே எதையும் தவறாக கூறியதாக தெரியவில்லை. கோலியின் ஃபார்ம் கவலைக்குரிய வகையில் இருக்கிறதென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதைத்தான் ஒரு முன்னாள் வீரராக விமர்சகராக ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார். சொல்லப்போனால், 'ஜாம்பவான் வீரர்களுக்கு இப்படியான காலக்கட்டங்களும் இருக்கவே செய்யும். அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.' என கோலிக்கு ஆதரவாகவும்தான் பாண்டிங் பேசியிருக்கிறார். பாண்டிங் கூறிய அந்த கருத்திற்கு கம்பீர் பதில் வினையாற்றியிருக்க வேண்டும். அதை விடுத்து இந்திய கிரிக்கெட்டைப் பற்றி கருத்து சொல்ல ரிக்கி பாண்டிங் யார் என கேட்பது ஒருவித அராஜகம், தலைக்கனத்தின் உச்சம்.

ரிக்கி பாண்டிங்

இப்படியொரு கருத்தை கூற கம்பீருக்கு அடிப்படையிலேயே அருகதை இல்லை. ஏனெனில், முன்னாள் வீரர் என்ற பெயரில் வர்ணனைப் பெட்டியில் உட்கார்ந்துகொண்டு கம்பீரும் பல அணிகளையும் பல வெளிநாட்டு வீரர்களையும் சகட்டுமேனிக்கு விமர்சித்திருக்கிறார். கடந்த ஓடிஐ உலகக்கோப்பையின் போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை 'பாபர் அசாம் ரொம்பவே சுமாராக கேப்டன்சி செய்கிறார்.' என கடுமையாக விமர்சித்திருந்தார். விமர்சகராக கம்பீருக்கு அப்படி விமர்சிக்க அத்தனை உரிமையும் இருக்கிறது. அவரின் விமர்சனத்தில் எந்த தவறும் இல்லை. அதேமாதிரிதான் இங்கே ரிக்கி பாண்டிங்கும் இந்திய வீரர்களைப் பற்றிய தன்னுடைய கருத்தை முன் வைத்திருக்கிறார். தனக்கு ஒரு நியாயம் இன்னொருவருக்கு வேறு நியாயம் என கம்பீர் பேசுவது அநியாயம்.

பாண்டிங்கிற்கு இந்திய கிரிக்கெட்டைப் பற்றி என்ன தெரியும்? என்றும் கம்பீர் கேட்டிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டை உன்னிப்பாக கவனிப்பவரில் ரிக்கி பாண்டிங்கும் ஒருவர். கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் பிரித்திவி ஷா அவுட் ஆன விதம் நியாபகம் இருக்கிறதா? பிரித்திவி ஷாவின் டெக்னிக்கில் இப்படி சில ஓட்டைகள் இருக்கிறது. இப்படி ஒரு பந்து வந்தால் அவர் இப்படி அவுட் ஆவார் என பாண்டிங் பேசி முடிக்கையில் அவர் சொன்னதைப் போன்றே பிரித்திவி ஷா அவுட் ஆகியிருப்பார். அந்த க்ளிப் இணையத்தில் இப்போதும் பல சமயங்களில் வைரலாக ஓடிக்கொண்டிருக்கும்.

Prithvi Shaw | பிரித்திவி ஷா

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் இடையிலேயே எங்களை நோக்கி வரும் விமர்சனங்களை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம் என்கிறார் கம்பீர். கொஞ்ச நேரத்திலேயே ரிக்கி பாண்டிங் மீது பாய்கிறார். இதுதான் கம்பீர் மற்றும் இப்போதைய அணியின் பிரச்னை. எப்போதுமே சொல் ஒன்று செயல் வேறுதான். யார் விமர்சனம் செய்கிறார் என பார்க்காமல், அந்த விமர்சனத்தில் நியாயம் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்தாலே இந்திய அணி தற்போதைய சரிவிலிருந்து சீக்கிரமே மீண்டு விடும்.

பான்டிங்கின் கமெண்டிக்கு கம்பீரின் பதில் குறித்து உங்கள் கருத்து என்ன... கமெண்ட்டில் பதிவிடுங்கள்..!

IPL Mega Auction:'டெல்லியின் கோலியை பெங்களூருவுக்கு எப்படி கடத்தினார் மல்லையா?' - Auction Rewind 2

ஐ.பி.எல் இன் 18 வது சீசனுக்கு முன்பான மெகா ஏல சமயத்தில் நிற்கிறோம். கடந்த 17 ஆண்டுகளில் ஐ.பி.எல் இல் மாறவே மாறாத ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா? விராட் கோலிதான். கடந்த 17 ஆண்டுகளில் அவர் பெங்களூரு அணிக்... மேலும் பார்க்க

IPL Mega Auction: 'இந்தியா சிமெண்ட்ஸ் Vs ரிலையன்ஸ்' தோனியை CSK வாங்கிய கதை | 2008 Auction Rewind - 1

தோனி, இன்றைய தேதிக்கு இந்திய விளையாட்டுலகம் இதற்கு முன் கொண்டாடிடாத அளவுக்கு கொண்டாடப்படும் மாபெரும் வீரர். ஐ.பி.எல் என்கிற ஒரு கிரிக்கெட் லீகே அவரை நம்பியிருக்கிறது. அவருக்காக லீகின் விதிகளையே மாற்றி... மேலும் பார்க்க

SAvInd : 'வீணான வருண் சக்கரவர்த்தியின் அசாத்திய பௌலிங்!' - தோல்விக்கு காரணமான அந்த 3 விஷயங்கள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்ந்திருக்கிறது. முதல் போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி வென்ற நிலையில் இரண்டாம் போட்டியில் இந்தியா எங்கே சொத... மேலும் பார்க்க

Ashwin: 'இந்தியாவை விட நியூசிலாந்து தகுதியான அணியாக இருந்தது!' - ஒயிட் வாஷ் பற்றி அஷ்வின்!

நியூசிலாந்துக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடரை 0-3 என தோற்று ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது இந்திய அணி. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே உள்ளூரில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆவத... மேலும் பார்க்க

CSK செய்தது தேசநலனுக்கு எதிரானதா? - உத்தப்பாவின் விமர்சனமும் நிதர்சனமும்

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக ஆடியிருந்தார். ரச்சின் ரவீந்திரா இந்தத் தொடருக்கு முன்பாக சென்னையிலுள்ள சி... மேலும் பார்க்க