GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வழங்குகிறது உங்கள் பழைய தங்க நகைக்கு புது லைஃப்
1964-ல் அதன் எளிமையான தொடக்கத்திலிருந்து, 'ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்' நகைத் துறையில் ஒரு முன்னணி பெயராக வளர்ந்துள்ளது, தற்போது அதன் 60 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது.
தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்கள் ஆகியவற்றின் பல்வேறு வகைகளுடன், ஈடில்லா தரத்திற்கான ஜிஆர்டியின் அர்ப்பணிப்பானது, தென் இந்தியா மற்றும் சிங்கப்பூர் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. இந்த நிறுவனம் 61 கிளைகளுடன் நம்பகத்தன்மை மற்றும் நகை துறையில் தனக்கென தனி அடையாளத்துடன் தொடர்ந்து பிரகாசிக்கிறது.
தற்போது ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், 'பழைய தங்க நகைகளுக்கு ஒரு நியூ லைஃப் கொடுக்கும்' முயற்சியாக, அதன் புதிய கேம்ப்பைன் மூலம் தொடர்கிறது. இந்த சிறப்புச் சலுகை வாடிக்கையாளர்களின் பழைய தங்க நகைகளை நவீன காலத்திற்கேற்ப தலைசிறந்த படைப்புகளாக மாற்ற ஏதுவாக அமைகிறது. இந்த பிரச்சாரம் தமிழ்நாட்டில் 'தங்க அவதாரம்' என்றும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 'ஸ்வர்ண அவதாரம்' என்றும், கர்நாடகாவில் 'ஸ்வர்ண அவதாரா' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய தங்கத்தை மாற்றும்போது (ஒரு கிராமுக்கு) கூடுதலாக 75 ரூபாய் பெற சலுகையையும் வழங்குகிறது. இந்த குறுகிய கால சலுகை 'பழைய தங்க நகை எக்ஸ்சேஞ்'களுக்கு மட்டுமே பொருந்தும், தங்க நாணயங்கள் அல்லது கோல்ட் பார்களை வாங்குவதற்கு பொருந்தாது.
இந்த கேம்ப்பைனை துவக்கி வைத்து பேசிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர், திரு.ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் கூறியதாவது: "தங்கம் நம் கலாச்சாரத்தில் எப்போதும் காலத்தால் அழியாத அழகான ஒன்றாகவும், பாரம்பரியத்தின் சின்னமாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக 'பழைய தங்கம்' தலைமுறைகளின் நினைவுகளை தாங்கி, அது உண்மையிலேயே விலைமதிப்பற்றதாக மாறுகிறது. இதனை மனதில் கொண்டு, எங்கள் புதிய பிரச்சாரத்தைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், எங்களின் இந்த முயற்சி உங்கள் நேசத்துக்குரிய பழைய நகைகளுக்கு - அதற்கே உரிய மாற்றத்தை வழங்கும் தனிப்பட்ட வாய்ப்பை வழங்குகிறது."
மேலும் இது குறித்து, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில்: "அரும்பெரும் சிறப்பினால் உருவான எங்கள் 60 ஆண்டுகால பாரம்பரியத்தை தொடர்ந்து, இந்த சிறப்புப் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த முயற்சியின் மூலம், உங்கள் பழைய பொக்கிஷங்களை புத்தம் புதிய தனித்துவமானதுமான தலைசிறந்த படைப்புகளாக மாற்றுவோம் என்று நம்புகிறோம். உங்கள் தங்கத்திற்கு புதிய அவதாரத்தைக் கொடுக்க நாங்கள் உங்களை அன்போடு வரவேற்கிறோம்." என்றார்.