செய்திகள் :

Health: அடிக்கடி கிரில்டு சிக்கன் சாப்பிடுறீங்களா? மருத்துவர் எச்சரிப்பது என்ன?

post image

சைவ உணவகங்களில் ஆவி பறக்க... சுடச்சுட... தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும்.

தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில் காட்டப்பட்டும் தயாரிக்கப்படும் இந்த இறைச்சிகள், எண்ணெய் பளபளப்புடனும், எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டுவரப்படும்போதே நாவில் எச்சில் ஊறும்.

தந்தூரி ரொட்டி, சிக்கன் மட்டும் அல்ல. இப்போது, பல்வேறு கிரில்டு உணவுகள் எல்லா நகரங்களிலும் கிடைக்கின்றன.

எண்ணெய்யில் பொரிக்காமல், நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது நல்லது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில், இது சரியா? விளக்கம் தருகிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சதீஷ்.

கிரில்டு சிக்கன்
கிரில்டு சிக்கன்

இறைச்சியில் மசாலா தடவி, ஒருநாள் முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊறவைக்கின்றனர். இதனுடன், சாஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்ற அனைத்தையும் கலந்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேகவைக்கின்றனர்.

தீயில் 20 நிமிடங்களாவது சுட்டு எடுக்கின்றனர். இறைச்சியை மட்டும் தீயில் சுட்டால், மோசமான விளைவுகள் அதிகம் இருக்காது.

இறைச்சியுடன் எண்ணெய், மசாலா பொருட்கள், சுவை மற்றும் நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நெருப்பில் வாட்டப்படும்போது, பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

குறைவான விலையில் கிடைப்பதால், வெளிமாநிலங்களில் இருந்து முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சியைக்கூட வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

மீதமாகும் இறைச்சியை ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்துகின்றனர். ஃப்ரெஷ்ஷான இறைச்சியை வாங்கிச் சமைக்கும்போது பாதிப்பு இல்லை. ஆனால், முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அசைவ ஹோட்டல்களில் 10, 15 முழுக் கோழிகள் கம்பியில் குத்தப்பட்டு கிரில் பாக்ஸில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. தவிர, மசாலாக்கள் தடவப்பட்ட நிலையில் இன்னும் நிறையக் கோழிகள் உள்ளே ஃப்ரீஸரில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இவை அனைத்தும் ஒரே நாளில் தீர்ந்துவிடுவது இல்லை. எப்போது வெட்டப்பட்டது எனத் தெரியாத இறைச்சியைத்தான், நாம் வாங்கிச் சாப்பிடுகிறோம்.

தீயில் சுட்ட சோளம் நல்லது! சோளத்தைச் சுட்டு விற்பார்கள். அதில் ரசாயனங்களோ, நிறங்களோ, செயற்கை உப்புகளோ, எண்ணெய்யோ சேர்ப்பது இல்லை. சோளத்தைச் சுட்ட பிறகுதான், சுவைக்காக உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்க்கப்படுகின்றன. எனவே, இவற்றைச் சாப்பிடுவதால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.
கிரில்டு சிக்கன்
கிரில்டு சிக்கன்

விதவிதமான சுவைகளில் உணவை ருசிப்பது தவறு இல்லை. ஆனால், இத்தகைய உணவுகள் முழுக்க முழுக்க சுவைக்காக மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

இதனால், உடலுக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை உப்பு மற்றும் நிறங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதைச் சாப்பிடுவதால், முதலில் அல்சர் வரும்.

ரசாயனங்கள் கலக்கப்பட்டு பழைய இறைச்சியைச் சாப்பிடும்போது வயிறு தொடர்பான புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

எப்போதேனும் ஓரிரு முறை சாப்பிட்டால், பிரச்னை இல்லை. தொடர்ந்து ஆண்டுக்கணக்காகச் சாப்பிடும் பழக்கம் இருந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் வரலாம்.

இதயம், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி மற்றும் எரிச்சல், புற்றுநோய் செல்கள் அதிகமாதல் போன்ற பிரச்னைகள் உருவாகும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Helmet: உங்களுக்கு ஏற்றபடி ஹெல்மெட் வாங்குவது முதல் பராமரிப்பு வரை..!

போலீஸ் கெடுபிடிக்குப் பயந்து ஹெல்மெட் அணிபவர்களே அதிகம்! நாம் வேண்டாவெறுப்பாக ஹெல்மெட் அணிந்தாலும், அது என்னவோ நம்மைக் காக்கும் வேலையைச் செய்துகொண்டே இருக்கிறது. கடும் வெயிலில், வியர்வையில் குளிப்போம்... மேலும் பார்க்க

`கார் பயணங்களில் 'இந்தத்' தண்ணீர் வேண்டவே வேண்டாம்! மீறினால்..' -எச்சரிக்கும் மருத்துவர்

ஆபீஸ் செல்வது, வெளியூர் பயணம், லாங் டிரைவ் என காரில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்?தாகம் அடிக்கும், தண்ணீர் தேவைப்படும் என உங்கள் கார் டிரிப்பில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்பவரா நீங... மேலும் பார்க்க

Health: தெரிந்த சோளம்; தெரியாத தகவல்கள்... சொல்கிறார் உணவியல் நிபுணர்!

சோளம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? கடற்கரைக்குச் சென்றாலே நம் கண்கள் முதலில் தேடுவது சோளக்கடைகளைத்தான். புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் என இதில் இல்லாத சத்துக்க... மேலும் பார்க்க

மூக்கை சுத்தம் செய்யும் Neti pot - யார், எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும்?

சில நாட்களாக ரீல்ஸ்களில் நெட்டி பாட் (neti pot) மூலம் மூக்கை சுத்தம் செய்யும் முறை ட்ரெண்ட் ஆகி வருவதை பார்த்திருப்போம். மூக்கை சுத்தம் செய்யும் இந்த முறை பல ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவ முறையில் பின்ப... மேலும் பார்க்க

Summer & Cold: வெயில் காலத்திலும் சளி பிடிக்குமா? - மருத்துவர் விளக்கம்!

பனி காலத்துலதான் சளி பிடிக்கும். ஆனால், வெயில் காலத்தில் சளி பிடிக்காது என்பதுதான் பலரது கருத்தாக இருக்கிறது. ஆனால், உண்மையில் கோடையில்தான் சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என்கிறார் பொது நல மருத்துவர் ... மேலும் பார்க்க

Health: அறுசுவை உடலில் அதிகமானால், குறைந்தால் என்னவாகும்? - முழுமையான அலசல்!

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறையில், அறுசுவை உணவே, சமச்சீரான உணவாகச் சொல்லப்படுகிறது. இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என ஆறு சுவை உணவுகளைச் சாப்பிடும்போது, அவை ஏழு விதமான தாத... மேலும் பார்க்க