செய்திகள் :

Health: அடிக்கடி தும்மல், அடுக்குத்தும்மல், அதிர வைக்கும் தும்மல்... தீர்வு இருக்கிறதா?

post image

தும்மல் என்பது இயல்பான ஒன்று. ஆனால், சிலர் பக்கத்தில் இருப்பவர்கள் பதறும் அளவுக்கும், வீடே அதிரும் அளவுக்கும் தும்முவார்கள். இது காலம், காலமாகவே இருந்து வரும் பிரச்னைதான். வயது முதிர்ந்த‌வர்களுக்கே அதிர வைக்கும் தும்மல் பிரச்னை அதிக அளவில் காணப் படுகிறது. இப்படி தும்மல் அதீத சத்தத்துடன் வெளிப்படுவதற்கு என்ன காரணம், அடுக்கடுக்கான தும்மல் எதனால் ஏற்படுகிறது, இதனால் உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் எழலாம். எந்தப் பிரச்னையையும் எளிதில் சமாளிக்க வழி இருக்கிறது'' என்கிறார் சென்னை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் பாலமுருகன்.

தும்மல்

'நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு கிருமியோ, தூசியோ நம் சுவாசம் வழியாக உடலுக்குள் ஊடுருவும்பட்சத்தில், உடனடியாக அதை வெளியேற்றும் தற்காப்பு நடவடிக்கைதான் தும்மல். இது நொடிப்பொழுதில் நடக்கும் செயல்பாடு. எதிர்பாராத நேரத்தில் தோன்றும் இதன் வேகம் காரணமாகத்தான் சமாளிக்க முடியாமல் சிலர் அதிக சத்தத்துடன் தும்முகின்றனர். அத்துடன் தும்மலிட அதிகம் சிரமப்படுபவர்களும் அதிக சத்தத்துடன் தும்முவார்கள். இது ஒவ்வொருவரின் உடல் இயல்பைப் பொறுத்து மாறுபடும். அதிக சிரமப்பட்டு தும்மும்போது, காது வலியும் ஏற்படலாம். மூக்குக்கும் காதுக்கும் தொடர்பு இருப்பதால் மூக்கில் இருக்கும் சைனஸ் பிரச்னையின் தாக்கம் காது வரைக்கும் பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால்தான் சின்னக் குழந்தைகளிடம் மூக்கைப் பொத்திக்கொண்டு தும்மக்கூடாது என்பார்கள்!

அன்றாட வாழ்வில் நாம் தூசி படிந்த காற்றையே சுவாசித்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக சுவாசப் பகுதியில் அலர்ஜி ஏற்பட்டு மூக்கின் உட்பகுதியில் சிவந்து வீக்கம் உண்டாகலாம். இதனால் சுவாசப் பிரச்னை மற்றும் தும்மலின்போது அதிக சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மூக்கில் இருந்து நீர் வடிதல், தொடர்ச்சியான அதீத தும்மல் மற்றும் மூக்கு அடைப்பு போன்றவை இதன் முதல் அறிகுறிகள். நாளடைவில், இதுவே சைனஸ் பிரச்னையாக மாறி, சிறிது தூசி பட்டால்கூட தொடர்ச்சியான தும்மலை ஏற்படுத்திவிடும்' என்கிற டாக்டர் பாலமுருகன், சிகிச்சை முறைகளையும் கூறுகிறார்.

தும்மல்

'தும்மல் நிகழ்வின் வளர்ச்சியைத் தடை செய்வதே முதலாம் கட்ட மருத்துவம். தினமும் காலை மூச்சுப் பயிற்சி செய்வது, வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்து சுத்தமற்ற காற்றை சுவாசிப்பதைத் தவிர்ப்ப‌து, இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தலையணை உறையை மாற்றுவது, தூசி படியும் பொருள்களைப் படுக்கை அறையில் வைக்காதிருப்பது, வீட்டை சுத்தப்படுத்தும் போது மூக்கை துணியால் கட்டிக்கொள்வது, கை நகத்தை சுத்தமாக வைத்திருப்பது என செய்தால் தும்மல் வருவதற்கான காரணங்களை 50 சதவிகிதம் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். தவிர, அதிக எண்ணெய் ஆகாரங்கள், கொழுப்புச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அதிக எடை காரணமாக, தொண்டை மற்றும் மூச்சுப்பகுதியில் உள்ள சதைப்பற்று தடிமனாகலாம். இதுவும் சுவாசப் பிரச்னைக்கும், தும்மலின்போது அதிக சிரமத்துக்கும் வழிவகுக்கும்.

தும்மல் பிரச்னை அதிகமாகும்பட்சத்தில் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். எண்டோஸ்கோப்பி மூலம் சுவாசப் பகுதியில் அலர்ஜி எந்த அளவுக்கு உள்ளது, இதன் விளைவால் மூக்கின் உட்புறச் சதைகள் எந்த அளவுக்கு வீங்கி இருக்கிறது என்பதையும் பரிசோதித்துப் பார்த்து சரிப்படுத்த முடியும்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Doctor Vikatan: ஹுசைனியை பாதித்த `ஏபிளாஸ்டிக் அனீமியா': ரத்தப் புற்றுநோயாக மாறியது எப்படி?

Doctor Vikatan: பிரபல கராத்தே வீரர் ஹுசைனிக்குஏபிளாஸ்டிக் அனீமியா என்ற பிரச்னைபாதித்திருத்திருப்பதாகவும், அது பிளட் கேன்சர் எனப்படுகிற ரத்தப் புற்றுநோயாகமாறியதால், அவர் வாழ்நாள்களை எண்ணிக்கொண்டிருப்பத... மேலும் பார்க்க

Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரும் பாட்காஸ்டருமான லெக்ஸ் ஃப்ரித்மேன் உடன் கிட்டத்தட்ட 3 மணிநேர உரையாடலை மேற்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் செதோரா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கொளுத்தும் கோடைக்காலத்திலும் ஜலதோஷம் பிடிப்பது ஏன்?

Doctor Vikatan: பொதுவாக குளிர் மற்றும் மழைக்காலங்களில்தானேபலருக்கும் ஜலதோஷம் பிடிக்கும்.... எனக்கோ, எல்லா சீசன்களிலும் ஜலதோஷம் இருக்கிறது. கொளுத்தும் கோடைக்காலத்தில்கூடஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இதன... மேலும் பார்க்க

America: 3.6 மில்லியன் கிரெடிட் கார்டுகள் செயலிழப்பு... பின்னணியில் எலான் மஸ்க்! - காரணம் என்ன?!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றத்தில் இருந்து தினமும் ஒவ்வொரு அறிவிப்புகள், சில சில அதிர்ச்சிகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், தற்போது அமெரிக்க அரசு அலுவலகங்களின் கிட்டதட்ட 2 லட்சம் கிரெ... மேலும் பார்க்க

Chennai: ரூ.2,000 மாதக் கட்டணம்; ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்கலாம்..!

இப்பேருந்துகள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயணிக்கிறார்கள். அலுவலகம் செல்வோருக்கு வசதியாக இருவழி பயண அட்டை, விருப்பம்போல் பயணிக்க மாதாந்திர பயண அட்டை என பல்வேறு சலுகை கட்டணங்களை மாநகர் போக்குவரத... மேலும் பார்க்க

Russia - Ukraine War: ``போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தான்; ஆனால்..'' - புதின் கேட்கும் 3 கேள்விகள்!

இந்த வாரம், சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க - உக்ரைன் பேச்சுவார்த்தையில் உடனடி 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது உக்ரைன்.அடுத்ததாக, அமெரிக்க அதிகாரிகள் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் அங... மேலும் பார்க்க