செய்திகள் :

Health: உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சையா? சாதக, பாதகம் விளக்கும் நிபுணர்!

post image

டல் சார்ந்த விஷயம் என்றால் அனைவருக்கும் ஒரு தனி கவனம்தான். இருந்தும் பலர் உடல்பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். மற்றவர்களைபோல பிடித்த உடையை அணிய‌ முடியாது; பிறரை போல் நாம் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை; சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என பல பிரச்னைகள் வரிசைக்கட்டும். இதனால் அவர்களும் உடற்பயிற்சி, கட்டுப்பாடுடன் கூடிய உணவு முறைகள் என பலவற்றை மேற்க் கொள்வார்கள். இவற்றால் பலன் கிடைக்கவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது ஜிம்.

Obesity
Obesity

இதில், இன்னொரு முக்கியமான விஷயம் 'என் உடல் எடையை நான் இப்படித்தான் குறைத்தேன்' என பிரபலங்கள் சொல்லிவிட்டால், ஏன் எதற்கு என கேள்வி எழுப்பாமல் அதை அப்படியே பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவிற்கு சென்று வைரலான திருநங்கை அனுஶ்ரீ, யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் 'உடல் எடையைக் குறைக்க பல லட்சங்கள் செலவு செய்து மாத்திரைகள், உடற்பயிற்சிகள் என அடுத்தவர்கள் சொன்னதை எல்லாம் செய்தேன். ஆனால், அவை எதுவும் எனக்கு பலன் தரவில்லை. பிறகு 'மினி கேஸ்ட்ரிக் பைபாஸ் சர்ஜரி' செய்த பிறகுதான் என் உடல் எடை இவ்வளவு குறைந்ததாக கூறியிருந்தார். அந்த வீடியோவில் பலரும் அந்த அறுவை சிகிச்சையை நாங்களும் செய்துகொள்ளலாமா என்று கேட்டிருந்தனர்.

மினி கேஸ்டிரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை என்றால் என்ன; இந்த சிகிச்சை முறை எப்படி உடல் எடையை குறைக்கிறது? என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தினேஷ் அவர்களிடம் பேசினோம்.

உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சையா?
உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சையா?

''உடல் எடையைக் குறைக்க உதவும் அறுவை சிகிச்சைகளை மருத்துவ உலகில் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்று சொல்வோம். வயிற்று பைபாஸ் அறுவை சிகிச்சை (Roux-en-Y Gastric Bypass), வயிற்றுப்பட்டை அறுவை சிகிச்சை (Gastric Banding), ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி (Sleeve gastrectomy) என பல வகைகள் இந்த பேரியாட்ரிக் சிகிச்சையில் உள்ளது. அதில் ஒன்றுதான் மினி கேஸ்டிரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை. யாருக்கு எந்த வகை பேட்ரியாட்ரிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை, அவர்களது BMI அளவீட்டை‌ பொறுத்து மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

BMI அளவீடு 35-க்கு மேல் உள்ளவர்களை morbid obesity உள்ளவர்கள் என குறிப்பிடுவோம். இவர்கள் அதிக உடல் எடையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். BMI 35 அளவீடு இருந்து, உடன் சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருந்தாலோ... BMI 40 அளவீடு இருக்கிறது; ஆனால் எந்த நோயும் இல்லை என்றாலோ... அவர்களுக்கு முதலில் டயட், உடற்பயிற்சி போன்றவற்றை சில மாதங்களுக்கு பரிந்துரை செய்வோம். அதில் போதிய அளவு மாற்றம் இல்லையெனில் அடுத்தக்கட்டமாக தான் இந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் ஒன்றை மேற்கொள்வோம்.

மினி கேஸ்டிரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை
மினி கேஸ்டிரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை

மினி கேஸ்டிரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை, சிறு துளை அறுவை சிகிச்சை ( Laparoscopic), மற்றும் ரோபாடிக் அறுவை சிகிச்சை (Robotic ) மூலம் செய்யப்படும். இந்த மினி கேஸ்டிரிக் பைபாஸ் அறுவை சிகிச்சையில் இரண்டு முறை உள்ளது. ஒன்று சாப்பிடும் சாப்பாட்டின் அளவைக் குறைப்பது. மற்றொன்று இரைப்பையில் இருந்து ஊட்டச்சத்துகள் உறிஞ்சும் அளவினைக் குறைப்பது.

சாதரணமாக மனித இரைப்பை 2 லிட்டர் அளவிலான உணவுப்பொருட்களை தக்கவைக்க கூடிய அளவில் இருக்கும். அதனை அறுவை சிகிச்சை‌யின்போது ஸ்டேப்பிளிங் தொழில்நுட்பம் மூலம் 50 முதல் 150 லிட்டர் அளவை மட்டுமே தக்கவைக்க கூடிய சிறிய அளவாக குறைப்பதுதான் கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை. இதனால் அதிக உணவு உட்கொள்ள முடியாமல் கொஞ்ச உணவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விட்டது போல் தோன்றும்.

உடலுக்கு செல்லும் கலோரிகளின் அளவு தானகவே குறைவதால் எந்தவொரு மாத்திரையும், உடற்பயிற்சியும் இல்லாமலேயே உடல் எடை சில ஆண்டுகளிலேயே கணிசமான அளவு குறைந்துவிடும். இது சாப்பிடும் அளவினை குறைக்கும் முறை.

உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சையா?
உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சையா?

மற்றொன்று ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சும் தன்மையை குறைப்பது. நமது உடலில் அதிக அளவு ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவது நிகழ்வது சிறுங்குடலின் முன்பகுதியில்தான். மனித சிறுகுடலின் அளவு பொதுவாக ஏழு முதல் எட்டு அடி வரை இருக்கும். இதில் சிறுகுடலின் முன்பகுதியில் நான்கு அடி வரை இரைப்பையுடன் பைபாஸ் செய்து விடுவார்கள்.

இதனால் இரைப்பையில் இருந்து வெளியேறும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு நேராக சிறுகுடலின் பின் பகுதியை சென்றடையும். அங்கு குறைந்த அளவிலான ஊட்டச்சத்து உறிஞ்சுவது நிகழும் என்பதால் உடலுக்கு தேவையான அளவை தவிர்த்து அதிகமான அளவை அவை உறிஞ்சாது. இதனால் உடல் எடை இழப்பு நிகழும்‌.

இந்த அறுவை சிகிச்சை செய்த முதல் ஆறு மாதங்களில் குறிப்பிட்ட அளவிலான எடை இழப்பு நிகழும்‌. அடுத்த ஒராண்டுகளில் இன்னும் சற்று உடல் எடை குறையும். இரண்டாண்டுகளுக்கு மேல் அவர்கள் உண்ணும் உணவின் அளவிற்கு ஏற்றாற்போல் உடல் எடை மாறிவிடும். அதன் பிறகு சிகிச்சை காரணமாக எடை இழப்பு நிகழாது.

எவ்வளவு நாட்களில் உடல் எடை குறையும்?
எவ்வளவு நாட்களில் உடல் எடை குறையும்?

இந்த சிகிச்சை முறை என்பது ஒரு மீட்டமைக்கக்கூடிய சிகிச்சை முறை. எனக்கு மறுபடியும் பழைய உடலமைப்பே வேண்டும் என்றால் மீண்டும்‌‌ ஒரு அறுவை சிகிச்சை செய்து ஸ்டேப்பிளிங் செய்ததை நீக்கிவிட்டால் மீண்டும் அவரது உணவு முறை பழைய நிலைக்கு மாறிவிடும்.

இதில் எந்தப் பகுதியும வெட்டி நீக்காததால் இந்த முறை மிக எளிதாக நடைபெறுகிறது‌. இந்த சிகிச்சையை மேற்கொண்டவர்களுக்கு மாத்திரை மருந்துகளால் குணப்படுத்த‌ முடியாத சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவைகூட பலருக்கு குணமாகி இருக்கிறது.

என்னதான் நன்மைகள் இருக்கக்கூடிய முறையாக இது இருந்தாலும், இதுவொரு அறுவை சிகிச்சை. ஆபரேஷனுக்குப் பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் இந்த சிகிச்சை முறையிலும் ஏற்படும்.

அனஸ்தீஷியா கொடுப்பதில் தொடங்கி, ரத்தம் உறையாமை, இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இரைப்பை மற்றும் சிறுகுடலில் கசிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

 டாக்டர் தினேஷ்.
டாக்டர் தினேஷ்.

ஊட்டச்சத்துகள் அதிகம் உறிஞ்சப்படாததால் வழக்கத்தைவிட அதிகமாக கழிவு வெளியேறுவது, வாயு பிரச்னை, அதிக எடை இழப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்

உடல் எடையைக் குறைக்க இது எளிமையான வழி என்பதால், இளைஞர்கள்கூட இந்த சிகிச்சையை‌ மேற்கொள்ள வருகிறார்கள். ஆனால், உடல் பருமனால் ஏதேனும் உடல் உபாதையால் அவதிப்படுபவர்கள் மட்டும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்பது என் கருத்து'' என்கிறார் டாக்டர் தினேஷ்.

``இந்த 12 நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் இனி நுழைய முடியாது..'' - ட்ரம்ப் அறிவிப்பு; என்ன காரணம்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அப்படி நேற்று, உலகில் உள்ள குறிப்பிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவ... மேலும் பார்க்க

Bangladesh: டிசம்பருக்குள் தேர்தல்! ராஜினாமா செய்யும் யூனுஸ்; ஹசீனாவின் எதிர்காலம்..? | In Depth

ரோட்டில் நின்றுகொண்டிருந்த பஸ்களும், கார்களும் கரும் புகைகளைக் கிளப்பி எரிந்துகொண்டிருக்க, கீழே சிதறிக் கிடக்கும் கற்களில் ஆங்காங்கே ரத்தம் தோய்ந்து… காய்ந்திருக்கின்றன. கற்களுடன் ஆங்காங்கே கட்டைகளும்... மேலும் பார்க்க

``2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு; பாஜக சதி, பழனிசாமி துணை.." - ஸ்டாலின் குற்றச்சாட்டு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த தகவலை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 2027-ம் ஆண்டு வரை மக்கள்தொகை கணக்கெடுப்பை தள்ளிப்போடுவதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து... மேலும் பார்க்க

Varicose: கால் நரம்புகள் சுருண்டு வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை; இயற்கை மருத்துவத்தில் தீர்வுஉண்டா?

’’கர்ப்பிணிப்பெண்கள், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் ஒரே இடத்தில் நின்று வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காலின் தோலுக்கு அடியில் ரத்தம் மேலும் கீழும் செல்ல முடியாம... மேலும் பார்க்க

``ஒரு மொழியை சிறுமைப்படுத்தி, ஒரு மொழியை உயர்த்திப் பேசுவது தேவையில்லாதது!'' - நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டையில் பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தத்தின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி வருகின்ற எட்டாம் தேதி நடைபெற உள்ளது.இன்று அவரது இல்லத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தி... மேலும் பார்க்க

Kamal: ``கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை; தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் வந்தது'' - கே.என்.நேரு

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசன் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் தக்ஃலைப் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தபடம் நாளை (ஜூன் 5 ஆம் தேதி) வெளியாக உள்ள நிலையில் சென்னையில் கடந்த சில தின... மேலும் பார்க்க