வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
HIV: 4 மாதக் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி; பெற்றவரும், தத்தெடுத்தவரும் கைவிரிப்பு... நிர்கதியான குழந்தை!
மும்பை வாடியா மருத்துவமனையில் கல்யாண் பகுதியைச் சேர்ந்த 4 மாத பெண் குழந்தைக்கு குடலிறக்க ஆப்ரேசன் செய்யப்பட்டது. இந்த ஆப்ரேசனின் போது அக்குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்தபோது, அதற்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் இருந்தது தெரியவந்தது. உடனே அக்குழந்தையின் முஸ்லிம் தாயாருக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்தபோது அப்பெண்ணிற்கு ஹெச்.ஐ.வி தொற்று இல்லை. இதையடுத்து குழந்தைக்கு எப்படி ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் ஏற்பட்டது என்று டாக்டர்கள் அப்பெண்ணிடம் கேட்ட போது பல அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. உண்மையில் அக்குழந்தை அப்பெண்ணிற்கு பிறந்தது கிடையாதாம். அந்தக் குழந்தையை தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண்ணிடம் இருந்து தத்து எடுத்ததாக தெரிவித்தார். அதோடு எச்.ஐ.வி பாசிட்டிவ் உள்ள குழந்தையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, குழந்தையை அப்படியே விட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது.

போலீஸார் இது விசாரித்தபோது பல உண்மைகள் தெரிய வந்தது. மும்பை அருகில் உள்ள கல்யாண் பகுதியில் வசிக்கும் இந்து பெண் 6 மாதங்கள் கர்ப்பமாக இருந்தபோது, தனக்கு குழந்தை வேண்டாம் என்று தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் முஸ்லிம் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெண்ணிற்கு ஏற்கெனவே ஒரு கருச்சிதைவு ஏற்பட்டு இருந்ததால்தான் அக்குழந்தையை தத்து எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தார். உடனே இந்து பெண் மும்பையில் உள்ள கே.இ.எம் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்தபோது முஸ்லிம் பெண்ணின் ஆதார் அட்டை மற்றும் அடையாள ஆவணங்களை கொடுத்து பதிவு செய்தார். மதமும் முஸ்லிம் என்றே பதிவு செய்யப்பட்டது. இதில் பிரச்னை ஏற்படாமல் இருக்க மருத்துவமனை ஊழியர்களிடம் பேசி சரி செய்திருந்தனர்.
குழந்தை பிறந்து 5 வது நாள் முஸ்லிம் பெண் குழந்தையை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றார். வீட்டிற்கு சென்றபோது குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டதால் குழந்தைகள் மருத்துவமனையான வாடியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதுதான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. தற்போது தத்து எடுத்த பெண்ணும், குழந்தையை பெற்ற பெண்ணும் குழந்தையை கைவிட்டுள்ளனர். இதனால் இப்போது குழந்தை மும்பை அருகில் உள்ள கல்வா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. போலீஸார் இரண்டு பெண்கள் மீதும் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.