HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்...
IND vs NZ: ``ஒரு அணியாக நிறைய சவால்களையும் அழுத்தங்களையும் சந்தித்திருக்கிறோம்'' - கே.எல்.ராகுல்
பரபரப்பாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது.

2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. டி20 உலகக்கோப்பையை வென்ற எட்டே மாதத்தில் இந்திய அணி இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
கடைசி நேர பிரஷரிலும் கச்சிதமாக ஆடி வெற்றியின் பாதைக்கு கொண்டுச் சென்று அதிரடி காட்டியிருக்கிறார் கே.எல். ராகுல். வெற்றிக்குப் பிறகு பேசிய அவர், ``இன்னும் எங்களிடம் பேட்டர்கள் இருந்தார்கள். அதனால் கடைசியிலும் நம்பிக்கையாகத்தான் இருந்தோம். இது சுலபமான விஷயம் இல்லை. ஆனாலும் வென்றதில் மகிழ்ச்சி. இந்தத் தொடரில் 5 போட்டிகளில் 3 போட்டிகளில் இதே மாதிரியான சூழலில்தான் ஆடியிருக்கிறேன்.

அதனால் இதே மாதிரியான மொமன்ட்களில் எப்படி ஆட வேண்டும் என்கிற அனுபவம் இருக்கிறது. ஒரு அணியாக நாங்கள் நிறைய சவால்களையும் அழுத்தங்களையும் சந்தித்திருக்கிறோம். தொழில் ரீதியான கிரிக்கெட்டர்களாக அதையெல்லாம் சிறப்பாகவே எதிர்கொண்டோம்." எனப் பேசினார்.