செய்திகள் :

Instagram: உங்க நண்பர்கள் எங்க இருக்காங்கன்ன தெரிஞ்சுக்கலாம் - இன்ஸ்டாவின் இந்த அப்டேட் தெரியுமா?

post image

உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் ஆப்பில் தற்போது பல்வேறு புதிய அப்டேட்கள் வந்துள்ளன. முதல் முக்கிய மாற்றம் ரீல்ஸ் வீடியோக்களின் நீளம் 3 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பயனர்கள் தங்களுடைய வீடியோக்களை நீளமாக அப்லோட் செய்யமுடியும்.

மேலும் "Watch History" எனும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியால் பயனர்கள் அவர்கள் முன்னர் பார்த்த ரீல்ஸ் வீடியோக்களை எளிதாக திரும்ப பார்வையிட முடிகிறது.

அடுத்து, இன்ஸ்டாகிராம் தனது AI தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. புதிய AI வசதிகள் மூலம், வீடியோக்களில் மொழிபெயர்ப்பு செய்ய முடியும்.

instagram

புதிய UI மாற்றங்களுடன், "Friends Map" என்ற அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இது நண்பர்களின் இருப்பிடத்தை காண உதவுகிறது. உங்கள் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை நிகழ்நேரத்தில் பார்க்கவும், சந்திப்பதற்கான இடங்களை பகிரவும் உதவுகிறது. இந்த அம்சம் ஸ்னாப்சாட்டில் உள்ள "ஸ்னாப் வரைபடம்" போன்றது.

மேலும் "Friends Reels" என்ற தனி அம்சம் மூலம் நண்பர்கள் பார்த்து ரியாக்ட் செய்த ரீல்ஸ் வீடியோக்களை ஒன்றாக பார்க்க முடியும். “Add Yours” ஸ்டிக்கர் என்ற ஒரு அப்டேட்டும் இன்ஸ்டாகிராமில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரு பயனர் ஒரு தலைப்பைக் கொடுத்து, "Add Yours" ஸ்டிக்கர் என்று பதிவிட்டால்,(உதாரணமாக, "இன்றைய காலைச் சூரியனைப் பகிரவும்" என்று பதிவிட்டால்)மற்ற பயனர்கள் அந்த ஸ்டிக்கரைத் தட்டி, தங்கள் சொந்த புகைப்படம் அல்லது வீடியோவை பதிவிடலாம்.

இந்த புதிய அப்டேட்கள் சமூக வலைதளங்களை மேலும் பயனுள்ளதாகவும் மாற்ற உதவுகின்றன.

சிட்டி யூனியன் வங்கி - டிஜிட்டல் பேமென்ட் உலகில் ஒரு புதுமை!

1904ல் தொடங்கிய சிட்டி யூனியன் வங்கி, தற்போது 120 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்து வருகிறது. கும்பகோணத்தில் தலைமையகத்துடன் 890-க்கும் மேற்பட்ட கிளைகள், 1700-க்கும் மேற்பட்ட ATM/BNAs மூலம் நாடு முழுவது... மேலும் பார்க்க

AI குக்கிங் அசிஸ்டன்ட்: `சமையல் ரெடி!' - நெட்டில் சமையல், தட்டில் சாப்பாடு!

' ஏங்க நான் சமையல் செய்றேன். கொஞ்சம் காய்கறி மட்டும் நறுக்கி கொடுத்துருங்க'என்கிற பேச்சுக்கே இனிமே இடமே இல்லை. நீ 50, நான் 50 என்று இல்லாமல் 100% சமையலையும் AI யே பார்த்துக்கொள்ளும் என்று சொன்னால் உங்... மேலும் பார்க்க

`Accenture' CTO கார்த்திக் நாராயண் கூகுள் தலைமை பொறுப்பில் நியமனம்; சுந்தர் பிச்சை வாழ்த்து

புதிதாக, கூகுள் கிளவுட் பிரிவில் தலைமை நிலை தயாரிப்பு மற்றும் வணிக அதிகாரியாக கார்த்திக் நரேன் நியமிக்கப்பட்டுள்ளார்.கூகிள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் கூறியதாவது:“இன்று நாம் கார்த்திக் நரேனை கூகுள் கி... மேலும் பார்க்க

Gita-GPt: கடவுளிடமே பேசுவதாக நம்பும் மக்கள்; இது எப்படி ஆன்மிக அறிவுரைகளை வழங்குகிறது?

தொழில்நுட்ப வளர்ச்சியில் சாட் ஜிபிடியின் பங்கு அதிகமாக உள்ளது. கல்வி, அறிவியல் தாண்டி தற்போது ஆன்மிக தளத்துக்கும் புதுமைப் போக்கை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு உதாரணமாக இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப... மேலும் பார்க்க

'சென்னை அரவிந்த் ஶ்ரீனிவாஸ் முதல் திண்டுக்கல் மகரிஷி வரை' - டெக் உலகை ஆளும் தமிழர்கள் லிஸ்ட்

தமிழ்நாட்டைச் சேர்ந்த டெக்கீஸ் பலரும் டெக் உலகில் பெரும் சாதனைகளைச் சத்தமில்லாமல் நிகழ்த்தி வருகின்றனர். 'Perplexity AI, Comet AI Browser'களை அறிமுகப்படுத்தி AI உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும... மேலும் பார்க்க

Sundar Pichai: "தென்னிந்திய ரயில் பயணம்; 'AI hub' மிகப்பெரிய முதலீடு" - சுந்தர் பிச்சை சொன்ன விஷயம்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, கூகுளின் 'Google AI hub data centre'ஐ ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பெரிய அளவில் கட்டமைக்க... மேலும் பார்க்க