செய்திகள் :

IPL 2025: ``எனக்கு ஏன் ஆட்டநாயகன் விருது கொடுத்தீங்க..'' - விராட் கோலி ஓப்பன் டாக்

post image

நேற்றையப் (ஏப்ரல் 20) போட்டியில் பஞ்சாப் அணியும், ஆர்சிபி அணியும் மோதின. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களைச்  சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறது.

RCB vs PBKS
RCB vs PBKS

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியக் கோலி ஆட்டநாயகன் விருதைப் பெற்றிருக்கிறார். இந்நிலையில் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கோலி, “இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. 2 புள்ளிகள் என்பது பிளே ஆஃப் தகுதி பெறுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

இந்தப் போட்டியில் கூடுதலாக அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னை விட தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடினார். அவருக்குத்தான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும். எதற்காக எனக்கு விருது அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை.

Virat Kohli - Devdutt Padikkal
Virat Kohli - Devdutt Padikkal

இந்த மெகா ஏலம் எங்களுக்கு சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா, பட்டிதார் ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்” என்று கூறியிருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

CSK: `பிளெமிங் உட்பட அணி நிர்வாகம் செய்த மிஸ்டேக்’ - சிஎஸ்கே செயல்பாடு குறித்து ரெய்னா அதிருப்தி

சிஎஸ்கே அணி ஐ.பி.எல்லில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு படுமோசமாக இந்த சீசனில் ஆடிவருகிறது. 8 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது.குறிப்பாக 5 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்... மேலும் பார்க்க

BCCI ஒப்பந்தம்: ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் சேர்ப்பு; பட்டியலில் நீக்கப்பட்ட வீரர்கள் யார் யார்?

2025–26ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டிருக்கிறது. ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ வெளியிடும். அந்தவகையில் 2... மேலும் பார்க்க

IPL: ஸ்பான்ஸ்ர்ஷிப் டு டெலிகாஸ்ட்... அணிகள் வருமானம் ஈட்டுவது எப்படி? - ஐ.பி.எஸ் பிசினஸ் தெரியுமா?

இன்றைக்கு கிரிக்கெட் உலகே பிசிசிஐயின் கையில்தான் இருக்கிறது எனலாம். பிசிசிஐ இத்தனை அதிகாரமிக்க கிரிக்கெட் போர்டாக மாறியதற்கு ஐ.பி.எல்லுமே ஒரு முக்கியக் காரணம்தான். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் தொடங்கி... மேலும் பார்க்க

IPL 2025 : 'அவரைப் பற்றி கவலைப்பட தேவையில்லை, அவர்...' - ரோஹித் பற்றி ஹர்திக் சொன்னது என்ன?

நேற்றையப் (ஏப்ரல் 21) போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் மும்பை அணி 8 புள்ளிகள் பெற... மேலும் பார்க்க

Rishabh Pant: ``பண்ட்டின் கேப்டன்சி highly underrated'' - கடைசி ஓவர் பிளானை விளக்கும் கைஃப்

ராஜஸ்தான் அணிக்கெதிராக லக்னோ அணி நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) விளையாடிய போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, மொத்தமாக 180 ரன... மேலும் பார்க்க

Rohit Sharma : 'சின்ன வயசுல க்ரவுண்டுக்குள்ளேயே விட மாட்டாங்க; ஆனா, இப்போ' - ரோஹித் நெகிழ்ச்சி

'மும்பை வெற்றி!'வான்கடேவில் சென்னைக்கு எதிராக நடந்த போட்டியை மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அதிரடியாக ஆடி 76 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். விருத... மேலும் பார்க்க