செய்திகள் :

Irfan: தொப்புள் கொடி வீடியோ; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான் - நடந்தது என்ன?

post image
தமிழில் பிரபல யூடியூபராக வலம் வருபவர் இர்ஃபான்.

இவர், யூடியூபில் தனக்கென ஒரு சேனலை வைத்து அதன் மூலம் பல கடைகளுக்குச் சென்று, அங்கிருக்கும் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ செய்து வருகிறார். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு, தனக்கு என்ன குழந்தை பிறக்க இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட அவர், 'Gender Reveal' என்ற பெயரில் அந்த வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இர்ஃபான்

பலரும் இர்ஃபானுக்கு எதிராகக் கருத்துகளை முன்வைத்திருந்தனர். இதையடுத்து, இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இர்ஃபானுக்கு கடந்த ஜூலையில் குழந்தை பிறந்தது. இதையடுத்து, மனைவியின் பிரசவத்தின்போது குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபானே கத்தரிக்கோலால் வெட்டுவதை வீடியோவாக எடுத்து யூடியூபில் வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் அறுவை சிகிச்சை அறைக்குள் வீடியோ எடுத்து அதனை யூடியூபில் பதிவிட்டதற்கும், தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியதற்கும் மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்திருகின்றனர்.

இர்ஃபான்

மேலும் மருத்துவர்கள் தவிர மற்றவர்கள் தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி தவறு என்பதால் அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவை நீக்கக் கோரி மருத்துவத்துறை கடிதம் அனுப்பி இருக்கிறது.

``கொலை மிரட்டல்'' மனம் திறந்த சல்மான்; ``அவருக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்'' -முன்னாள் காதலி சோமி

கொலை மிரட்டல்..பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த மாபியா கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கின்றனர். சல்மான் கான் 1998ம் ஆண்டு ரா... மேலும் பார்க்க

Organ Donor: இதயத்தை அகற்றத் தயாரான மருத்துவர்கள்; கண் விழித்த இளைஞர்... அமெரிக்காவில் அதிர்ச்சி!

அமெரிக்காவின் கென்டக்கியில் வசிப்பவர் தாமஸ் டிஜே ஹூவர் (36). இவர் போதைப் பொருளை அதிகமாக உட்கொண்டதால் திடீரென மயங்கி விழுந்தார். உடனே குடும்ப உறுப்பினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோ... மேலும் பார்க்க

``நிறைய திருமணம் செய்து, திருமணத்தின் கடவுளாக வேண்டும்..'' - ஜப்பான் இளைஞரின் இலக்கு!

ஜப்பானின் ஹொக்கைடோவின் வடக்கு மாகாணத்தில் வசிப்பவர் ரியுதா வதனாபே. 36 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வாழ்ந்து வருகிறார். இவரின் பெரும் ஆசை... கனவு... திருமணத்தின் கடவுள் ஆக வேண்டும் ... மேலும் பார்க்க

``மான்களை வேட்டையாடவில்லை.. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கமுடியாது'' - சல்மான் கான் தந்தை விளக்கம்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் 1998ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றபோது அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது. சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இது இன்னும் சல்ம... மேலும் பார்க்க

1951-ல் காணாமல் போன சிறுவன்... 70 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த மருமகன்.. நெகிழ வைத்த சம்பவம்!

70 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மாமாவை, மருமகன் தேடி கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் அர்மாண்டோ அல்பினோ. இவர் பிப்ரவரி 21,1951 அன்று மாலை கலிபோர்ன... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக குறையாத கரன்ட் பில்; வெளிவந்த உண்மை... அதிர்ந்துபோன வீட்டு உரிமையாளர்! - என்ன நடந்தது?

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கென் வில்சன் என்ற நபர் 15 ஆண்டுகளாக தனது பக்கத்து வீட்டுக்காரருக்கும் சேர்த்து மின்சார கட்டணம் செலுத்திக்கொண்டிருந்ததை சமீபத்தில் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளா... மேலும் பார்க்க