செய்திகள் :

Israel போர் நிறுத்தம்: பணயக்கைதிகளிடம் ஹமாஸ் வழங்கிய 'Gift Bag' உள்ளே இருந்தது என்ன?

post image

ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தப்படி நேற்று (ஜனவரி 19) 3 பெண் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படிக்கும் முன், 'பரிசு பை' ஒன்று வழங்கப்பட்டது.

அக்டோபர் 7, 2023ல் தொடங்கிய போர் இறுதியாக முடிவை எட்டியிருக்கிறது. முதற்கட்டமாக விடுவிக்கப்படும் 3 பணயக் கைதிகள் ரோமி கோனென், எமிலி தமரி மற்றும் டோரன் ஸ்டெய்ன்ப்ரெச்சர் ஆவர்.

விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகளை வரவேற்கும் வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (Israel Defence Force) வெளியிட்டுள்ளனர்.

"நாங்கள் இதற்காகத்தான் 471 நாள்கள் போரிட்டோம். வெல்கம் ரோமி கோனென், எமிலி தமரி மற்றும் டோரன் ஸ்டெய்ன்ப்ரெச்சர்" என அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இவர்களில் எமிலி மற்றும் டோரன் அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலின் போது கடத்தப்பட்டனர். ரோமி கோனென் நோவா திருவிழாவின் போது கடத்தப்பட்டுள்ளார் என AFP செய்தி நிறுவனம் 'பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போனோர் குடும்பங்கள் மன்றத்தை' மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

பரிசு பையில் இருந்தது என்ன?

பணயக்கைதிகள் செஞ்சிலுவை சங்கத்தின் காரில் ஏற்றப்படும்போது அவர்கள் கையில் ஒரு பேப்பர் பை வழங்கப்பட்டதும், அவர்கள் சான்றிதழ்களுடன் சிரித்த முகமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்ததும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் முதலில் ஒப்படைக்கப்பட வேண்டும். இதில் ஹமாஸால் விடுதலை செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட முதல் 33 பேரில் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 7 நாட்களில் இன்னும் 4 பேர் விடுதலை செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள் இன்னும் 16 நாட்களில் முடிவடையும். அதில் இஸ்ரேலிய ராணுவத்தினரும் விடுதலை செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

”அமைதிப்படை படத்தில் வரும் அமாவாசைதான் பழனிசாமி" - செந்தில் பாலாஜி காட்டம்

”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பௌர்ணமிகளுக்கு மாண்புமிகு தளபதிதான் முதலமைச்சராகத் தொடர்வார் என்பதை 2026-ல் உணர்ந்து கொள்வார்” என்... மேலும் பார்க்க

Seeman: 'சீமான் ஈழம் சென்றது உண்மைதான்; ஆனால் அந்தப் புகைப்படம்...' - கொளத்தூர் மணி சொல்வதென்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் போட்டோவை 'எடிட்' செய்து கொடுத்ததே நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்திருந்தார்.இந்த சம்பவம் அரசியல் வட்டார... மேலும் பார்க்க

ஜகுபர் அலி கொலை: ``போராளிகள் கொல்லப்படுவதுதான் திராவிட மாடலா?" - சீமான் காட்டம்

புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராப் போராடிவந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்த கொலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆளும் திமுக... மேலும் பார்க்க