செய்திகள் :

Israel Vs Iran: ``Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களை குறிவைத்து தாக்கியிருக்கிறோம்"- ஈரான்

post image

கடந்த சில நாள்களாக, 'ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு' என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையில் ஜூன் 12 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் 'ஆபரேஷன் ரைசிங் லையன்' என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியது.

ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் தாக்குதலின் பின்னணி என கூறப்படுகிறது.

ஈரான் அதிபர்
ஈரான் அதிபர்

அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது ஈரான்.

இதில் `ஒரு பெண் உட்பட குறைந்தது இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்' என தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 'ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3' என்றப் பெயரில் ஈரான் இன்று காலைமுதல் தாக்குதலை தொடர்ந்திருக்கிறது. இந்தத் தாக்குதலின் ஏவுகணைகள் பலவற்றை இஸ்ரேல் தடுத்திருக்கிறது.

இருப்பினும் அடுக்கடுக்கான ஏவுகணைகளை ஈரான் ஏவியிருக்கிறது. இது தொடர்பாக ஈரான் 'டெல் அவிவ் பொருளாதார மையம், பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டிடம், நிதியமைச்சகத்தின் கட்டிடம், Tel Nof விமானத்தளம், Haifa-வில் சில இடங்கள், காசா கடல் எல்லைக்குள் இஸ்ரேல் எண்ணெய் எடுக்கும் தளம் என 6 இடங்களை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறோம்" என தெரிவித்திருக்கிறது.

Doctor Vikatan: குழந்தைக்கு அதிகம் சுரக்கும் உமிழ்நீர்; நார்மல் தானா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் 10 வயதுக்குழந்தைக்கு சமீபகாலமாக உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கிறது. காரணம் என்ன... அது ஏதேனும் பிரச்னையின்அறிகுறியா... அப்படியே விடலாமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவ... மேலும் பார்க்க

``வரும் தேர்தலில் திருச்சியில் போட்டி; நடிகர் விஜய் மனசு..'' - திருநாவுக்கரசர் தடாலடி

ராகுல் காந்தி பிறந்த நாள்: வேலைவாய்ப்பு முகாம்நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி-யின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகமான அருணாச... மேலும் பார்க்க

`திருமாவளவன் பேரணியில் ஹெலிகாப்டரில் பூ தூவ அனுமதி மறுப்பு' - காவல்துறை சொன்ன காரணம்

திருச்சி மாநகரில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, 'மதசார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.டி.வி.எஸ் டோல்கேட் பக... மேலும் பார்க்க

Doctor Vikatan: இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிய ECG டெஸ்ட் மட்டுமே போதுமா?

Doctor Vikatan: ஒருவரின் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய இசிஜி டெஸ்ட் மட்டுமே போதுமானதா, ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதை அதில் கண்டறிய முடியுமா, ஆஞ்சியோகிராம் பரிசோதனை யாருக்குத்தேவைப... மேலும் பார்க்க

தெருவோர மருந்தகங்கள்.. நாம் மறந்த மருத்துவச்செடிகளின் பலன்கள்!

மருத்துவம் வளர்ச்சி அடையாத காலங்களில், நம் முன்னோர்கள் பல வகையான நோய்களை மூலிகைகளை வைத்தே குணப்படுத்திக் கொண்டனர். அந்தச் செடிகள் எல்லாம் சாதாரணமாக நம் வீட்டு கொல்லைப்புறங்களிலும், தெருவோரங்களிலுமே இர... மேலும் பார்க்க

``அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்கு..'' -திமுக எம்எல்ஏ விமர்சனம்; கே.என்.நேருவின் பதில்

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நட... மேலும் பார்க்க