செய்திகள் :

Jaiswal: ஆஸ்திரேலியாவில் கடுப்பான ரோஹித்... ஜெய்ஸ்வால் இன்றி புறப்பட்ட டீம் பஸ்?

post image
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது கோபம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. பும்ரா தலைமையிலான முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி ரோஹித் தலைமையிலான இரண்டாவது போட்டியில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. பலரும் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷியை விமர்சித்தனர். தற்போது பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள மூன்றாவது போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

ஜெய்ஸ்வால், ரோஹித்

இதனைத்தொடர்ந்து அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேன் செல்வதற்காக கிளம்பிய இந்திய அணியின் டீம் பஸ்ஸில் இளம் வீரரும் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனுமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பயணிக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேன் செல்வதற்காக இந்திய வீரர்கள் தயாராக இருந்துள்ளனர். அவர்களுடன் பயிற்சியாளர்கள், அணியின் உதவியாளர்களும் தயாராக இருந்துள்ளனர். இரண்டு பேருந்துகள் அவர்களை அழைத்துச் செல்ல வந்துள்ளது.

ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர், விராட் கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் பேருந்தில் ஏறிய பின்னும், இளம் வீரர் ஜெய்ஸ்வால் வராமல் இருந்திருக்கிறார். அவருக்காக அனைத்து வீரர்களும் காத்திருக்கின்றனர். நீண்ட நேரம் காத்திருந்தும் ஜெஸ்வால் வராமல் இருந்ததால் ரோஹித் சர்மா மிகுந்த கோபம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகு ஜெய்ஸ்வால் இல்லாமல் பேருந்து புறப்பட்டுள்ளது.

ஜெய்ஸ்வால், ரோஹித்

இதன்பின், 20 நிமிடங்களுக்கு மேலான பிறகு ஹோட்டலின் லாபிக்கு வந்த ஜெய்ஸ்வால் அணியினர் புறப்பட்டு சென்றதைப் பார்த்திருக்கிறார். அதன் பிறகு ஜெய்ஸ்வாலுக்காக பாதுகாவலர்கள் அடங்கிய காரை இந்திய அணி ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் ஏறி, விமான நிலையம் சென்று அணியினர் உடன் அவர் இணைந்திருக்கிறார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Smriti Mandhana: மகளிர் கிரிக்கெட்டில் உலக சாதனை... அசத்திய ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடைசிப் போட்டியில் சதமடித்து புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்.மூன்று ஒருநாள... மேலும் பார்க்க

AUS-W vs IND-W: சொதப்பிய இந்திய மகளிர் அணி... ஆஸியிடம் ஒயிட் வாஷ் ஆன இந்தியா!

அதிரடி காட்டிய ஆஸ்திரேலியாஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மகளிர் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளிலேயே தோல்வியடைந்து தொடரை இழந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் ஆறுதல்... மேலும் பார்க்க

Vinod Kambli : சச்சின் - காம்ப்ளி சந்திப்பு தரும் வலியும்; மாபெரும் திறமையாளன் சரிந்த கதையும்

தன்னுடைய பால்ய நண்பனான வினோத் காம்ப்ளியை சச்சின் டெண்டுல்கர் சந்தித்த புகைப்படம்தான் இணையத்தின் சமீபத்திய வைரல்.சச்சினைக் கண்டவுடன் வாஞ்சையோடு எழுந்தரிக்க முயன்று முடியாமல் தடுமாறிய காம்ப்ளியை பார்க்க... மேலும் பார்க்க

CT: `BCCI-க்கு முன் பாகிஸ்தான் இந்த `முடிவு' எடுக்க வேண்டும்' - முன்னாள் கேப்டன் அறிவுரை

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் சூழலில், தாங்கள் அங்கு செல்ல மட்டோம் என்பதில் இந்திய அணி உறுதியாக இருப்பத... மேலும் பார்க்க

Joe Root: இன்னும் 493 ரன்களில் பாண்டிங் இடம் காலி; அடுத்து சச்சின் தான்... தனி ரூட்டில் ஜோ ரூட்!

கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளிலும் சரி, ஒருநாள் போட்டிகளிலும் சரி அதிக ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரே முதலிடத்தில் இருக்கிறார். இந்தச் சாதனையை இந்த வீர... மேலும் பார்க்க

Mohammed Siraj Vs Travis Head : களத்தில் ஏற்பட்ட மோதல்; `இருவருக்கும் அபராதம்' - விளக்கமளித்த ICC

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட்டுக்கு அபராதம் விதித்துள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டியில் இருவருக்க... மேலும் பார்க்க