செய்திகள் :

Jos Buttler : 'அந்த கேட்ச்சை விட்டதற்காக வெட்கப்பட்டேன்' - ஜாஸ் பட்லர் ஓப்பன் டாக்!

post image

'குஜராத் வெற்றி!'

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

ஜாஸ் பட்லர்
ஜாஸ் பட்லர்

குஜராத் சார்பில் பௌலிங்கில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பேட்டிங்கில் பட்லர் சிறப்பாக ஆடி 73 ரன்களை எடுத்திருந்தார். போட்டிக்குப் பிறகு ஜாஸ் பட்லர் சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.

'பட்லர் வருத்தம்!'

ஜாஸ் பட்லர் பேசுகையில், 'என்னுடைய பேட்டிங்கை மகிழ்ந்து அனுபவித்து ஆடினேன். எங்களின் பௌலர்களும் சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். நான் உட்பட எங்கள் அணியினர் சிறப்பாக பீல்டிங் செய்திருந்தால் இன்னும் 30 ரன்கள் குறைவான டார்கெட்டே வந்திருக்கும். நான் அந்த கேட்ச்சை விட்டதற்காக வெட்கப்பட்டேன்.

Jos Buttler
Jos Buttler

முழுமையாக கேட்ச்சை பிடிப்பதற்குள்ளேயே கிப்ஸை போல கொண்டாட நினைத்து கோட்டைவிட்டு விட்டேன். (சிராஜ் வீசிய முதல் ஓவரில் அவர் விட்ட எளிமையான கேட்ச்சை குறிப்பிடுகிறார்.) பவர்ப்ளேயின் தொடக்கத்தில் பந்து கொஞ்சம் மூவ் ஆனது.

எங்களின் ஓப்பனிங் பேட்டர்கள் சிறப்பாக நின்று ஆடி சமாளித்து விட்டார்கள். சிறப்பான பௌலர்கள், திறன் வாய்ந்த பேட்டர்கள், அதிரடியான ஹார்ட் ஹிட்டர்கள் என எங்கள் அணி வலுவாகவே இருக்கிறது.' என்றார்.

Virat Kohli: ஜான் சீனா ஸ்டைலில் நடனம்; வைரலாகும் கோலியின் மோதிரம்; பின்னணி என்ன?

WWE மல்யுத்த வீரர் ஜான் சீனாவின் 'யூ கேன் நாட் சீ மி' என்ற சைகையைச் செய்து நடனம் ஆடிய விராட் கோலியின் வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. கடந்த திங்கட்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெ... மேலும் பார்க்க

Priyansh Arya : 'டெல்லி ப்ரீமியர் லீக் டு ஐ.பி.எல் ஹீரோ!' - யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

சென்னை ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார் பஞ்சாபின் பிரியான்ஷ் ஆர்யா. வெறும் 39 பந்துகளில் சதமடித்து சென்னை வீரர்களை மிரள வைத்திருக்கிறார் இந்த 24 வயதே ஆன இளைஞர்.Priyansh'பஞ்சாபின் திட்டம்... மேலும் பார்க்க

PBKS vs CSK : 'நான் ஓப்பனிங் இறங்கப் போறதில்ல!' - ருத்துராஜ் உறுதி!

'டாஸ் முடிவு!'பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சண்டிகரின் முலான்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டியின் டாஸை பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஷ் வென்றார். முதலில் பேட் ச... மேலும் பார்க்க

ISSF: ஒன்னு இல்ல ரெண்டு... உலக துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனை!

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்று வரும் (ஏப்ரல் 1 -11) ISSF - உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியா இரண்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறது.இதில், கடந்த வெள்ளிக்கிழமை (... மேலும் பார்க்க

Ashleigh Gardner: காதலியை திருமணம் செய்துகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை! - வைரல் புகைப்படம்!

ஆஸ்திரேலியாவின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை Ashleigh Gardner. பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறந்து விளங்கும் இவர், கடந்த மாத இறுதியில் டி20 தொடருக்காக ஆஸ்திரேலிய மகளிர் அணியின் ஒரு பகுதியாக ... மேலும் பார்க்க