தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்; கோலாகலமாக நடந்த விழாவில் குவிந்த பக்தர்கள்
வடக்கே காசி, தெற்கே தென்காசி என்று அழைக்கப்படும் சிவதலங்களில் ஒன்று தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்.
தென்காசி மாவட்ட நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்றதும் பழைமை வாய்ந்த திருத்தலமுமான காசி விஸ்வநாதர் கோவிலில் சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நேற்று முன் தினம் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கொடிமரம், சுற்று மண்டபம், வண்ணப்பூச்சு, கல் மண்டபம், பிரசாத ஸ்டால்கள், திருக்கோவில் பணிகள் உள்பட பல்வேறு திருப்பணிகள் கோயிலில் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 3-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று, அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து 5 மணிக்கு விநாயகர், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 7 மணிக்கு மகா பூர்ணாகுதி, திரவ்யாகுதி நடைபெற்றது.
9 மணிக்கு மேல் உலகம்மாள் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், பாராளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து மகாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs