செய்திகள் :

அள்ளிக் கொடுக்கும் அட்சய திருதியை: சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி கல்யாணத்தில் சங்கல்பம் செய்யுங்கள்!

post image

30-4-2025 புதன்கிழமை அட்சய திருதியை நன்னாளில் இங்கு பிரமாண்ட சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி கல்யாண வைபவமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த கல்யாண வைபத்தால் தடைப்பட்டிருந்த சகல சுப காரியங்களும் நடைபெறும்.

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சொர்ணாகர்ஷண பைரவர் திருமணம்

தெய்வத் திருமணங்களைக் கண்டாலோ கலந்து கொண்டாலோ நம் வீட்டிலும் மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை. ராதா கல்யாணம், சீதா கல்யாணம், மீனாட்சி கல்யாணம், ஸ்ரீநிவாச கல்யாணம், வள்ளித் திருமணம் போல சொர்ணாகர்ஷண பைரவர் - ஸ்ரீபைரவி திருமணமும் சிறப்பானது. எனினும் இது அபூர்வமாக நடைபெறுகிறது.

சொர்ணாகர்ஷண பைரவர் வடிவம் என்பதே அரிதான வடிவமாகவும் அபூர்வ வரங்கள் அளிக்கும் வடிவமாகவும் உள்ளது. அமர்ந்த திருக்கோலத்தில் தனது மடியில் பைரவியை இருத்திக்கொண்டு காட்சி அளிப்பார். இரு கரங்களுடன், ஒரு கரத்தில் தங்கக் கலசத்தில் அமிர்தமும், மறு கரத்தில் சூலமும் வைத்திருப்பார். தங்கக் கலசத்தில் திருமகள் ஆவாஹணம் செய்திருப்பாள். வைரக் கிரீடமும், பட்டு வஸ்திரமும் அணிந்து தம்பதி சமேதராகக் காட்சி அளிக்கும் இவரை தரிசித்தாலே சகல ஐஸ்வர்யங்களும் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.

திருப்பதிக்கே பொன்னும் பொருளும் அள்ளித்தரும் அதிர்ஷ்ட தெய்வம் சொர்ணாகர்ஷண பைரவர். திருப்பதிக்குச் சென்றால், சொத்து, பொன், வீடு, மனை என அனைத்தையும் பெறலாம் என்று நினைக்கிறோம். அது ஏன் தெரியுமா! வேங்கடவன் பிரதிஷ்டை ஸ்ரீசக்கரம் ஶ்ரீ சொர்ணாகர்ஷண சக்கரம் என்பதால் பொன், பொருள் சேர்கிறது என்பது நம்பிக்கை. ஸ்ரீஆதி சங்கரர் திருப்பதியில் ஶ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரப் பிரதிஷ்டை செய்ததால் அங்கு செல்லும் பக்தர்களுக்கும் பொன்னும், பொருளும் அருளும் ஸ்தலமாகத் திகழ்கின்றது என்பதும் நம்பிக்கை. அஷ்டமி மற்றும் பௌர்ணமி, வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சொர்ணாகர்ஷண பைரவரை வணங்கினால் வேண்டியது விரைவில் நிறைவேறும் என்பதும் ஐதிகம்.

சொர்ணாகர்ஷண பைரவர் திருமணம்

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அதிலும் தம்பதி சமேதரான சொர்ணாகர்ஷண பைரவருக்கும் ஸ்ரீபைரவிக்கும் திருமணம் நடத்தி வைத்து வேண்டிக்கொண்டால் உங்கள் எல்லாவித வேண்டுதல்களும் நிறைவேறும் என்கின்றன ஆன்மிக நூல்கள். செல்வத்தின் அடையாளமான சொர்ணகார்ஷண பைரவருக்கும் வெற்றியின் அடையாளமான பைரவியையும் இணைத்து வைக்கும் இந்த கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டால் தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குடும்ப நன்மை சிறந்து விளங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் தோல்வியுற்றவர்களுக்கு மறுமணம் சிறப்பாக அமையும் என்கிறது ஆன்மிகம்.

ஆனால் எல்லோராலுமே இந்த கல்யாண வைபவத்தை நடத்திவிட முடியாது. பெரும் பொருள் செலவில் நடத்தப்படும் இந்த சொர்ணாகர்ஷண பைரவர் - பைரவி திருமண வைபவத்தை உங்கள் சக்தி விகடனும் புதுச்சேரி ஞானமேடு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயமும் இணைந்து நடத்தவுள்ளது.

சொர்ணாகர்ஷண பைரவர் திருமணம்

பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஞானமேடு பகுதியில் அமைந்திருக்கிறது ஸ்ரீபைரவி சமேத ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம். இங்கு பைரவியை மடியில் அமர்த்திக் கொண்டு ஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். மகான் சேஷாத்திரி சுவாமிகள் தவமிருந்த புண்ணிய பூமியான இங்கு முத்து குருக்கள், சேஷாத்திரி சுவாமிகளின் உத்தரவுப்படி இங்கு இந்த ஆலயத்தைக் கட்டி கோலாகலமாக இங்கு விழாக்கள் எடுத்து வருகிறார். வரும் அட்சய திருதியை நாளில் அன்பர்கள் செல்வவளம் பெருகவும் தரித்திரம் ஒழியவும் 30-4-2025 அன்று சிறப்பான சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி கல்யாண வைபவம் நடைபெற உள்ளன, வாசகர்கள் இதில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வளர்ச்சியைப் பெருக்கும் அட்சய திருதியை நாளில் (30-4-2025) இந்த வைபோகத்தில் கலந்து கொண்டால் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும். குறிப்பாக பொன் பொருள் சேரும்.

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை  அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

பதிவு செய்ய இந்த QR - கோடை பயன்படுத்திக் கொள்ளவும்.

சொர்ணாகர்ஷண பைரவர் திருமணம்

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அட்சய திருதியை: பொன்னும் பொருளும் அருளும் சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்; சங்கல்பியுங்கள்

30-4-2025 புதன்கிழமை அட்சய திருதியை: பொன்னும் பொருளும் அருளும் சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்! சங்கல்பியுங்கள்! உங்கள் சக்தி விகடனும் புதுச்சேரி ஞானமேடு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயமும் இணைந்த... மேலும் பார்க்க

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்; கோலாகலமாக நடந்த விழாவில் குவிந்த பக்தர்கள்

வடக்கே காசி, தெற்கே தென்காசி என்று அழைக்கப்படும் சிவதலங்களில் ஒன்று தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்.தென்காசி மாவட்ட நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்றதும் பழைமை வாய்ந்த திருத்தலமு... மேலும் பார்க்க

தென்காசி: காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு இடைக்கால தடை! என்ன நடந்தது?

தென்காசியில் காசி விஸ்வநாதர் உடனுறை உலக அம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு குலசேகர பாண்டியனா... மேலும் பார்க்க

பாம்புக் கடியில் இருந்து மக்களை பாதுகாக்கும் கோயில் - 11 கிராம மக்களின் நம்பிக்கை என்ன?

உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஜதௌடா பாண்டா என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த புனிதத் தலம், சுற்றியுள்ள 12 கிராம மக்களை பாம்பு கடியில் இருந்து பாதுகாப்பதாக கூறுகின்றனர். பல நூற்றாண்டுகள... மேலும் பார்க்க

உலகின் முதல் சிவாலயம்; நவகிரக பயம் நீக்கும் அபூர்வ தரிசனம் - உத்திரகோசமங்கை கும்பாபிஷேகம் ஸ்பெஷல்

பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்திரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப்... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க