செய்திகள் :

Virat Kohli: ஜான் சீனா ஸ்டைலில் நடனம்; வைரலாகும் கோலியின் மோதிரம்; பின்னணி என்ன?

post image

WWE மல்யுத்த வீரர் ஜான் சீனாவின் 'யூ கேன் நாட் சீ மி' என்ற சைகையைச் செய்து நடனம் ஆடிய விராட் கோலியின் வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

கடந்த திங்கட்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

இந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை அதனுடைய சொந்த மைதானத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது பெங்களூரு அணி.

Kohli
Kohli

இந்நிலையில் இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, விராட் கோலி பிரபல WWE மல்யுத்த வீரரான ஜான் சீனாவின் “யு கேன் நாட் சீ மீ (you can't see me)” என்ற சைகையை வெளிப்படுத்திய வீடியோவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது. 

அந்த வீடியோவில் விராட் கோலி டி20 உலகக் கோப்பை வெற்றிக்காக வழங்கப்பட்ட வைர மோதிரத்தை அணிந்து கொண்டு ஜான் சீனாவின் “தி டைம் இஸ் நவ் (The Time is now)” என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

ஆர்.சி.பி டிரஸ்ஸிங் அறையில் டிம் டேவிட்டுடன் அவர் நடனமாடிய வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆர்சிபி அணி, “என்றென்றும் விராட் கோலியின் நேரம்தான்” என்று தலைப்பிட்டு இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Virat Kohli with Ring
Virat Kohli with Ring

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் நாமன் விருதுகளின் போது வைர மோதிரத்தை வழங்கியது.

இது `சாம்பியன்ஸ் மோதிரம்' என்று அழைக்கப்படுகிறது. அந்த மோதிரத்தில் ஒவ்வொரு வீரரின் பெயரும் எண்களும், மையத்தில் அசோக சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Rohit Sharma : 'நீங்க 100 அடிச்சு டீம் தோற்றா எந்த பயனும் இல்ல!' - கேப்டன்சி குறித்து ரோஹித் சர்மா

'ரோஹித் பேட்டி!'இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் க்ளார்க்குக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில், கேப்டன்சி குறித்து நிறைய விஷயங்களை ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியிரு... மேலும் பார்க்க

BCCI : இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழு கூண்டோடு நீக்கம்? - பின்னணி என்ன?

'பிசிசிஐ அதிரடி!'இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்து சில முக்கியமான நபர்களை பிசிசிஐ நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.indian teamகடந்த ஓராண்டில் இந்திய அணி நிறைய மோசமான தோல்விகளை தழுவிய... மேலும் பார்க்க

Starc : 'ராஜஸ்தான் அணியின் முடிவு எனக்கு பெரிய சர்ப்ரைஸ்!' - சூப்பர் ஓவர் `ஸ்டார்’ ஸ்டார்க்

'டெல்லி வெற்றி!'டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லியில் நடந்திருந்தது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியை டெல்லி அணி வென்றிருந்தது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ச... மேலும் பார்க்க