செய்திகள் :

குமரி அனந்தன் மறைவு: "அம்மாவோடு இரண்டறக் கலந்து விட்டார்" - மகள் தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்

post image

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் 93 வயதில் உடல் நலக் குறைவால் மரணித்துள்ளார்.

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்னைக்குச் சிகிச்சை பெற்றுவந்த அவர், மரணமடைந்ததாகத் தனது எக்ஸ் தள பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் அவரது மகளும், பா.ஜ.க தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழிசையுடன் குமரி அனந்தன்

காங்கிரஸ் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவரான குமரி அனந்தன், 1977ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

சாத்தான்குளம், ராதாபுரம், திருவெற்றியூர் ஆகிய தொகுதிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்ட இவர், அரசியல் பயணத்தில் காந்தி காமராசர் தேசிய காங்கிரஸ் என்ற தனிக்கட்சியையும் தொடங்கி வெற்றி பெற்றுள்ளார். பின்னர் அந்த கட்சியைக் காங்கிரஸுடன் இணைத்தார்.

இவர் மறைந்த தொழிலதிபர் எச்.வசந்தகுமாரின் அண்ணன். தற்போதைய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் பெரியப்பா.

குமரி அனந்தன்

நீண்ட அரசியல் வாழ்க்கையைக் கொண்டுள்ள இவர், காமராஜரின் சீடராகக் கருதப்பட்டார். எதிலும் தமிழுக்கு முதலிடம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பனை பாதுகாப்பு, மது விலக்கு எனப் பல்வேறு கோரிக்கைகளுக்காகக் காத்திரமான போராட்டங்களை, பாத யாத்திரைகளை நடத்தியுள்ளார்.

இவருக்கு தி.மு.க அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கௌரவித்தது.

குமரி அனந்தன் மறைவு குறித்து மகள் தமிழிசை சௌந்தரராஜன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்... இன்று என் அம்மாவோடு.. இரண்டறக் கலந்து விட்டார்...

குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் வைத்து இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது...

குமரி அனந்தன்

வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர். இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம் சீராக வாழ்வதைக் கண்டு பெருமைப்பட்டு வாழ்த்திவிட்டு எங்களை விட்டு மறைந்திருக்கிறார். என்றும் அவர் பெயர் நிலைத்திருக்கும்.

தமிழக அரசியலில் பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும். மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா. நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ. அதை மனதில் கொண்டு உங்கள் பெயரில் நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம்.

உங்கள் வழியில் நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல... நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்..

உங்கள் ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்... போய் வாருங்கள் அப்பா. தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்... நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்....

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மூடுவிழா’ - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு

2தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட நிறுவனம்...புதுச்சேரி லாஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது தொடர்பாக புதுச்சேரி தமிழார்வலர்கள... மேலும் பார்க்க

மேல்பாதி: சமூகப் பிரச்னையால் மூடப்பட்ட கோயில்; நீதிமன்ற உத்தரவால் திறப்பு... முழு பின்னணி!

அமைதிப் பேச்சு வார்த்தை தோல்விவிழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில். கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு கடந்த 201... மேலும் பார்க்க

`கொளுத்திடுவேன்...’ - மிரட்டிய ராணிப்பேட்டை திமுக நிர்வாகி; பறிபோன கட்சிப் பதவி; நடந்தது என்ன?

தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் எஸ்.எல்.எஸ்.தியாகராஜன். ராணிப்பேட்டை சிப்காட் மெயின் குடோனிலிருந்து, அந்த மாவட்டத்தில் இருக்கிற அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபா... மேலும் பார்க்க

கருணாநிதி சமாதியில் கோவில் கோபுரம்: "சேகர் பாபு மன்னிப்பு கோர வேண்டும்" - நயினார் நாகேந்திரன்

இன்று (ஏப்ரல் 17) சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானிய கோரிக்கை நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமாதிக்குச் சென்று மரி... மேலும் பார்க்க

'இதுவரை கிடையாது; இனிமேலும் கிடையாது!’ - பாஜகவுடன் `கூட்டணி ஆட்சி’ கேள்விக்கு அதிமுக எம்பி தம்பிதுரை

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வென்று இ.பி.எஸ் தனியாகத் தான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே கிடையாது'' என அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய... மேலும் பார்க்க

'பாஜக-வோடு கூட்டணியை ஏற்கவில்லை' - ராஜினாமா கடிதம் அனுப்பிய அதிமுக நிர்வாகி

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் என்.டி.ஏ கூட்டணி போட்டியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு அ... மேலும் பார்க்க