சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்...
Kerala: பயணிகளை ஏற்றிச்சென்றதாக ஆட்டோ டிரைவர் அடித்து கொலை? தனியார் பஸ் ஊழியர்கள் மூவரிடம் விசாரணை
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாணூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப்(49). இவர் தனியார் பஸ்ஸுக்கு முன்னால் ஆட்டோவில் சென்று பஸ் ஸ்டாப்பில் உள்ள பயணிகளை ஏற்றிச் சென்றதாக கோடூர் பகுதியில் வைத்து தனியார் பஸ் ஊழியர்கள் அப்துல் லத்தீப்பைத் தாக்கினர். அதில் காயம் அடைந்த அப்துல் லத்தீப் தனது ஆட்டோவிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறுவதற்காகச் சென்றுள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கிய அப்துல் லத்தீப் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
திரூர் - மஞ்சேரி ரூட்டில் ஓடும் தனியார் பஸ் ஊழியர்கள் சேர்ந்து ஆட்டோ டிரைவர் அப்துல் லத்தீப்பைத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பஸ் ஊழியர்கள் 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒதுக்குங்கல் ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த அப்துல் லத்தீப்புக்கு ஆதரவாக அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், "பயணிகள் கை காட்டினால் நிறுத்தலாம் என்ற சட்டம் ஆட்டோ டிரைவர்களுக்கு உண்டு. பத்து ரூபாய்க்காக நாங்கள் ஆட்டோவை நிறுத்துகிறோம். அதற்காக இப்படி அடித்து கொலை செய்யலாமா? இந்த வழக்கில் இறந்த ஆட்டோ டிரைவரின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
