செய்திகள் :

Kerala: போலீஸாரிடம் சிக்காமல் இருக்க MDMA போதைப்பொருள் பாக்கெட்டை விழுங்கிய இளைஞர் மரணம்

post image

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியை சேர்ந்த இளைஞர் இய்யாடன் ஷானித் (28). இவர் நேற்று முன்தினம் சாலை ஓரத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தாமரச்சேரி போலீஸார் ரோந்து சென்றனர். இய்யாடன் ஷானித்தை கண்ட போலீஸார் ஜீப்பை நிறுத்தினர். இதையடுத்து அவர் தன்னிடம் இருந்த எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் அடங்கிய பாக்கெட்டை விழுங்கியதுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். போலீஸார் அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது தன்னிடம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் இருந்ததாகவும், அதை விழுங்கிவிட்டதாகவும் தெரிவித்தான் ஷானித்.

ஷானித்திடம் போலீஸ் விசாரணை

இதையடுத்து அவரை தாமரசேரி அரசு தாலுகா மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதித்ததில் எம்.டி.எம்.ஏ பாக்கெட்டை விழுங்கியது உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அங்கு எண்டோஸ்கோப்பி எடுத்ததில் அவரது வயிற்றில் பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஐ.சி.யு-வில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஷானித் நேற்று மரணமடைந்தார்.

இந்த நிலையில் இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்ததில் 3 கவர்கள் இருந்ததாகவும், அதில் 2 கவர்களில் உப்புத்துண்டுகள் போன்று இருப்பதாகவும்,  மற்றொரு கவரில் இலை போன்று இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இளைஞர் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியவை விற்பனைக்காக வைத்திருக்கலாம் எனவும். போலீஸாரைக் கண்டதும் ஆதாரங்கள் சிக்கக்கூடாது என்பதற்காக போதைப்பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகளை விழுங்கியதாகவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

எம்.டி.எம்.ஏ விழுங்கியதால் இறந்த ஷானித்

தாமரச்சேரி தாசில்தார் மற்றும் குந்நமங்கலம் ஜூடிசியல் மஜுஸ்திரேட் முன்னிலையில் இதுகுறித்து பேராம்பிற டி.எஸ்.பி விசாரணை நடத்தி வருகிறார். எம்.டி.எம்.ஏ உடலில் கலந்ததால் மரணம் நேரிட்டதா என்பது பிரேதபரிசோதனை முடிவில்தான் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷானித்துடன் தொடர்பில் இருந்தவர்களிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்பு; பின்னணி என்ன?

வழக்கின் தன்மை, ஆவணங்களை மட்டும்தான் நீதிமன்றம் பார்க்கும், அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என்று போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மாநில நிர்வாகியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற... மேலும் பார்க்க

திண்டுக்கல்: மாந்தோப்பில் சுற்றித்திரிந்த குரங்கை சுட்டுக் கொன்று சாப்பிட்ட இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வீர சின்னம்பட்டியில் மாந்தோப்பில் தொல்லை செய்த குரங்கை பணம் கொடுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல கூறிய தோட்டத்துக்காரர், அதை கொன்று வீட்டிற்கு எடுத்து வந்து சமைத்து சாப்பிட்ட தொ... மேலும் பார்க்க

``திருமணம் மீறிய உறவு; வேறு ஒருவருடன் தொடர்பு..'' - பெண்ணை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் இளம்பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுக்கபட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலையடுத்து, வெப்படை காவல் நிலைய போலீஸார் சம்பவம் நடைபெற்ற இட... மேலும் பார்க்க

விருதுநகர்: `தனியார் பார்களில் லஞ்சம்..' - பணத்தோடு சிக்கிய கலால் வரித்துறை உதவி ஆணையர்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 58) என்பவர், விருதுநகர் மாவட்டத்தில், கலால் வரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் விருதுநகர் மாவட்ட தனியார் மெத்தனால் ஆய்வகங்கள் மற்றும் பார்களில்... மேலும் பார்க்க

லாரியை மறித்து பணத்தை பிடுங்கிய ஆர்.டி.ஓ அலுவலக டிரைவர், புரோக்கர் கைது..

தஞ்சாவூரில் சில தினங்களுக்கு முன்பு ஜல்லி ஏற்றி வந்த லாரியை காரில் வந்த இருவர் மறித்துள்ளனர். காரை ஓட்டி வந்தவர் காருக்குள் ஆர்.டி.ஓ இருக்கிறார் லாரி எங்கிருந்து வருகிறது, பர்மிட் இருக்கா என கேட்டுள்ள... மேலும் பார்க்க

நண்பனை கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிச் சென்ற இளைஞர்... சென்னையில் நடந்த கொடூரம்

சென்னை கொருக்குப்பேட்டை, பி.பி.சி.எல் (BPCL) சுற்றுசுவர் அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்பவர் கடந்த 5-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பி.பி.சி.எல் காம்பவுன்ட் சுவர... மேலும் பார்க்க