செய்திகள் :

Kerala: வழி நெடுக மக்கள், 22 மணிநேர இறுதி ஊர்வலம்; அரசு மரியாதையுடன் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம்

post image

கேரள மாநில முன்னாள் முதல்வரும், சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 21-ம் தேதி காலமானார்.

அவரது உடல் நேற்று முன் தினம் திருவனந்தபுரத்தில் இருந்து ஆலப்புழாவுக்கு கொண்டுசெல்லப்பட்டது. வி.எஸ்.அச்சுதானந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்றனர். இதையடுத்து இறுதி ஊர்வலம் ஆலப்புழாவுக்கு சென்றடைய 22 மணி நேரம் ஆனது.

வி.எஸ்.அச்சுதானந்தின் சொந்த ஊரான ஆலப்புழா வேலிக்ககத்து வீட்டிலும், ஆலப்புழா மாவட்ட சி.பி.எம் அலுவலகத்திலும் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பெரும் மழையையும், சூறை காற்றையும் பொருட்படுத்தாமல் வி.எஸ்.அச்சுதானந்தன் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

வி.எஸ்.அச்சுதானந்தன் உடலுக்கு வழிநெடுகிலும் அஞ்சலி செலுத்திய மக்கள்

நேற்று மாலை ஆலப்புழா கடற்கரையில் உள்ள ரீகிரியேஷன் கிரவுண்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. முழு அரசு மரியாதையுடன் அச்சுதானந்தனின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

ரிகிரியேஷம் கிரவுண்டில் வைத்து போலீசார் மரியாதை செலுத்தினர். பின்னர் அச்சுதானந்தன் உடலில் தேசிய கொடி போர்த்தப்பட்டது. பின்னர் அவரது உடல் வலியசுடுகாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

நேற்று இரவு 8.50 மணிக்கு ஆலப்புழா வலிய சுடுகாட்டுக்கு வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் கொண்டு செல்லப்பட்டது. 9.15 மணிக்கு சுடுகாட்டில்  அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மகன் அருண் குமார் இறுதிச்சடங்குகளை செய்தார். மகள் ஆஷா, மருமகன் தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் உள்பட பலர் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர்.

சுடுகாட்டு பகுதியில் வி.எஸ்.அச்சுதானந்தனின் குடும்பத்தினரும், முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

சி.பி.எம் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம் செய்யப்பட்டது

இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் வலியசுடுகாடு பகுதியில் நடந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், "நவீன கேரளத்தை உருவாக்கிய சில சிற்பிகளில் முக்கியமானவராக இருந்தார் வி.எஸ்.அச்சுதானந்தன்" என்றார்.

சி.பி.எம் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பேசுகையில், "இக்கட்டான காலகட்டத்திலும் பதற்றமின்றி கட்சியை வழிநடத்தியவர் வி.எஸ்.அச்சுதானந்தன். தன் வாழ்கை முழுவதையும் போராட்டமாக மாற்றிய தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன்" என்றார்.

Thailand vs Cambodia: இந்து கோவிலுக்கு உரிமை கொண்டாடுவதுதான் மோதலுக்கு காரணமா? | Explained

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே எழுந்துள்ள மோதலால் தென் கிழக்கு ஆசியாவில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால எல்லைப் பிரச்னைகள் திடீரென மோதலாக வெடித்திருக்கிறத... மேலும் பார்க்க

``கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்.. மதுரைக்கு அவப்பெயரை தந்துள்ளது திமுக அரசு..'' - அதிமுக டாக்டர் சரவணன்

தமிழ்நாட்டின் கலை, கலாச்சார தலைநகரமாக மதுரை விளங்குகிறது. அண்மையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட ஸ்வச் சர்வேக்ஷன் 2023 (Swachh Survekshan 2023) தூய்மைப் பட்டியல... மேலும் பார்க்க

Ear Health: காதில் ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்.. - விளக்கும் ENT சிறப்பு மருத்துவர்

ஐம்புலன்களில் ஒன்றான காது, கேட்பதற்கு மட்டுமல்ல... நம் உடலைச் சமநிலையில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காது குறித்த அக்கறையும் அதைப் பற்றிய அடிப்படைப் புரிதலும் இந... மேலும் பார்க்க

Modi தரும் நெருக்கடி, நிம்மதியிழக்கும் Edapadi? என்னதான் ஆச்சு அதிமுகவுக்கு? | Elangovan Explains

ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் திரிசங்கு நிலையில் தவிக்கிறார் எடப்பாடி என்கிறார்கள். கூட்டணி, ஆட்சியில் பங்கு என பாஜக தரும் நெருக்கடி, மாறாக விஜய்,சீமானுக்கு அழைப்பு கொடுப்பது என சில ஆட்டத்தை ஆட... மேலும் பார்க்க

Kerala: மீண்டும் சர்ச்சை.. மறைந்த தலைவர்கள் குறித்து நடிகர் விநாயகன் பதிவு - என்ன சொல்கிறார்?

கேளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகன் தனது செயல்பாடுகள் மூலமும், கருத்துகள் தெரிவிப்பதன் மூலமும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தனது வீட்டு பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்து சமீபத்தில் சர்ச்ச... மேலும் பார்க்க

Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன?

எந்த உணவு ஆர்டர் செய்தாலும், அவை பெரும்பாலும் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில்தான் நம் வீடுகளுக்கு டெலிவரி ஆகின்றன. பிரியாணியோ, ஃபிரைட் ரைஸோ அல்லது சாம்பார் சாதமோ சுடச்சுட அந்த கருப்பு நிற டப்பாவில... மேலும் பார்க்க