Kia Syros: `சின்ன கார் மாஸா இருக்குயா' பென்ஸ் காரில் இருக்கும் பல வசதிகள் இந்தக் குட்டி காரில்!
லேட்டஸ்ட்டாக டெல்லி வரை ஒரு விசிட் அடித்து வந்தேன், மோட்டார் விகடன் டீமுடன். கியாவில் இருந்து சிரோஸ் (Kia Syros) என்றொரு குட்டி காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்று டிரைவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது லாஞ்ச் ஆனபோது, ஒரு மாதிரி பாக்ஸி டைப்பில் இருந்த டிசைனைக் கண்டு பலர் ‛சின்ன டிஃபெண்டர் மாதிரி இருக்கே’ என்றார்கள். சிலர் ‛என்னங்க; வேகன்-ஆர் மாதிரி இருக்கு’ என்றும் கருத்துத் தெரிவித்தார்கள். இதற்குக் காரணம் - அந்த டால் பாய் டிசைன். ஆனால், உண்மையில் இந்த சிரோஸ் காரின் டிசைன் என்பது, Out of the Box என்றுதான் சொல்ல வேண்டும். கியாவின் பெரிய EV9 காரை இன்ஸ்பயர் செய்து டிசைன் செய்யப்பட்டிருக்கும் கார் இது. இன்னும் விலை அறிவிக்கப்படாத இந்தக் காரில் எம்பூட்டு வசதிகளைக் கொடுத்திருக்கிறது தெரியுமா கியா? ஒவ்வொண்ணாப் பார்க்கலாம்!

வென்டிலேட்டட் சீட்களைக் கொடுப்பதில் கொரிய, ஹூண்டாய் நிறுவனங்கள்தான் முன்னோடி. அந்த வகையில் சிரோஸ் காரில் முன்பக்கம் வென்டிலேட்டட் சீட்ஸ் மட்டுமில்லை; ரியர் சீட்களுக்கும் வென்டிலேட்டட் வசதி கொடுத்துக் கலக்கிவிட்டது. பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற சில ப்ரீமியம் கார் மாடல்களிலேயே இந்த வசதி இல்லை எனலாம். பின் சீட்களுக்குக் குளுகுளு சீட்களை அறிமுகப்படுத்தியது முதலில் டாடாதான். சஃபாரி - அதன் பிறகு ஹூண்டாய் தனது அல்கஸார் காரில் கொடுத்தது. இந்தக் குட்டி காம்பேக்ட் காரில் ரியர் சீட் வென்டிலேஷனெல்லாம் கொடுப்பது செம டூ மச்; த்ரீ மச்தான்!
டூயல் பனோரமிக் சன்ரூஃப் - இதுவும் பெரிய கார்களில் இருப்பதுதான். காரணம் - 4 மீட்டருக்கு மேலே இருந்தால்தான் டூயல் பனோரமிக் சன்ரூஃப் கொடுப்பது வசதியாக இருக்கும். சிரோஸ் ஒரு சப் 4 மீட்டர் கார். இதில் சிங்கிள் பேன் சன்ரூஃப் கொடுப்பதைத் தாண்டி, டூயல் பேன் பனோரமிக் எலெக்ட்ரிக் சன்ரூஃப் கொடுத்திருப்பது ப்ரீமியம் ஆப்ஷன்.

இதன் டோர் ஹேண்டில்களைக் கவனித்தால் தெரியும். இதற்குப் பெயர் Flush Type டோர் ஹேண்டில்கள். வழக்கமாக கார்களில் புல் டைப் லீவர்கள்தான் கொடுத்திருப்பார்கள். இந்த ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் அப்படியே காரோடு ஒட்டிக் கொண்டுவிடும். இது டிசைன் அழகைத் தாண்டி, ஏரோ டைனமிக்குக்கும் பெரிதாக உதவும். அதாவது, காற்றைக் கிழித்துக்கொண்டு போகும்போது, காரின் டிராக் ஃபோர்ஸ் குறைந்து நிலைத்தன்மை கிடைக்கும். இதுவும் பென்ஸ் EQS, மஹிந்திரா எக்ஸ்யூவி 700 போன்ற ப்ரீமியம் கார்களில் இருக்கும் அம்சம்.
17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் என்பது ஹேட்ச்பேக்குக்குத் தேவையைத் தாண்டிய ஒரு விஷயம். 16 இன்ச் வீல்கள் ஆப்ஷனாகக் கொடுக்கப்பட்டாலும், டாப் எண்ட்களில் இதில் 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுத்திருப்பது காரின் கிரிப்பைக் கூட்ட உதவும்.
அடுத்தது - இதன் பூட் ஸ்பேஸைச் சொல்லலாம். இதில் இருப்பது 465 லிட்டர் இடவசதி. க்விட் எனும் குட்டிக் காரில் 300 லிட்டர் இடவசதியைக் கொடுத்து உதவியது ரெனோதான். அதன் பிறகு பூட் ஸ்பேஸ், பயன்பாட்டுக்குப் பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. ரெனோவின் கைகர், இந்த செக்மென்ட்டில் பெரிதாக இருந்தது. 405 லிட்டர். அடுத்து நெக்ஸான். இவற்றைத் தாண்டி ஸ்கோடாவின் கைலாக் 446 லிட்டரில் வந்தது. அதையும் தாண்டி இந்த செக்மென்ட்டில் 465 லிட்டரில் வந்து வியக்க வைத்திருக்கிறது சிரோஸ்.
பின் பக்க சீட்களுக்கு ரெக்லைனிங் ஆப்ஷன் மற்றும் 60:40 ஸ்ப்ளிட் ஆப்ஷன் கொடுப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சிரோஸ் காரில் ஸ்லைடிங் வசதியும் கொடுத்திருக்கிறது கியா. அதாவது, வழக்கமாக முன் பக்க சீட்களில் இருக்கும் லீவர் மாதிரி இதில் கொடுத்திருப்பார்கள். அதை வைத்து சீட்டைப் பின்னுக்கு முன்னுக்குத் தள்ளிக் கொள்ளலாம். லெக்ரூம் சூப்பராகக் கிடைக்கும்.
பின் பக்க சீட்களுக்கு ரெக்லைனிங் ஆப்ஷன் மற்றும் 60:40 ஸ்ப்ளிட் ஆப்ஷன் கொடுப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சிரோஸ் காரில் ஸ்லைடிங் வசதியும் கொடுத்திருக்கிறது கியா. அதாவது, வழக்கமாக முன் பக்க சீட்களில் இருக்கும் லீவர் மாதிரி இதில் கொடுத்திருப்பார்கள். அதை வைத்து சீட்டைப் பின்னுக்கு முன்னுக்குத் தள்ளிக் கொள்ளலாம். லெக்ரூம் சூப்பராகக் கிடைக்கும். . இன்டீரியர் இடவசதிதான் இதி்ல் பெரிதாகப் பேசப்படப் போவது. இதற்குக் காரணம் - இந்த டால்பாய் டிசைன்தான். இதன் உயரம் 1680 மிமீ. இந்த உயரமான டால் பாய் டிசைன்தான், ரியர் சீட்டில் நல்ல ஹெட்ரூம் கிடைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் ரியர் ஏசி வென்ட்கள், சார்ஜிங் போர்ட்கள், ஏர் ப்யூரிஃபையர் என்று வசதிகளும் உண்டு.
இன்டீரியர் இடவசதிதான் இதில் பெரிதாகப் பேசப்படப் போவது. இதற்குக் காரணம் - இந்த டால்பாய் டிசைன்தான். இதன் உயரம் 1680 மிமீ. இந்த உயரமான டால் பாய் டிசைன்தான், ரியர் சீட்டில் நல்ல ஹெட்ரூம் கிடைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் ரியர் ஏசி வென்ட்கள், சார்ஜிங் போர்ட்கள், ஏர் ப்யூரிஃபையர் என்று வசதிகளும் உண்டு.
360 டிகிரி கேமரா மற்றும் டிரைவர் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் சிரோஸ் காரில் இருக்கின்றன. 360 டிகிரி கேமரா என்பதால், காரைச் சுற்றிலும் என்ன இருக்கிறது என்று நோட்டம் விட்டுக் கொள்ளலாம். மேலும், இண்டிகேட்டர்களை ஆன் செய்தால், டிரைவர் டிஸ்ப்ளேவில் வட்டமாக ஒரு டிஸ்ப்ளே ஆன் ஆகி, அதுவும் கேமரா மாதிரி செயல்படுகிறது. யு டர்ன் அடிக்கும்போது, காரைத் திருப்பும்போது பிளைண்ட் ஸ்பாட் ஏற்படாமல் இது தடுக்கும்.

ADAS (Advanced Driver Assistance System) லெவல் 2 தொழில்நுட்பம் இருப்பதால், காரைச் சுற்றிலும் ரேடார் மூலம் இயங்கும் சென்ஸார்கள் இருக்கும். தானாக பிரேக் பிடிக்கும் எமர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட், லேன் சேஞ்சிங் அசிஸ்ட் என்று சூப்பர். டெல்லி நெடுஞ்சாலையில் இதில் லேன் மாறினால் தானாகவே ஸ்டீயரிங் மாறி லேன் மாறும் வசதி சூப்பர். ஒரு விஷயம்- என்னதான் அடாஸ் இருந்தாலும், அதை முழுமையாக நம்புவது ஆபத்து. ஸ்டீயரிங்கில் ஒரு கை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதன் உள்ளே 12.3 இன்ச் டூயல் ஸ்க்ரீன்கள் செம அழகு போங்கள்! இதுவும் காஸ்ட்லியான ப்ரீமியம் கார்களி்ல் கிடைக்கும் அம்சம்! இது தவிர லெதர் அப்ஹோல்சரி, டூயல் டோன் இன்டீரியர், ஒயர்லெஸ் சார்ஜிங், 8 ஸ்பீக்கர் சிஸ்டம் என்று வாவ்! டீசல், பெட்ரோல், மேனுவல், ஆட்டோமேட்டிக் என ஓட்டுவதற்கும் பல ஆப்ஷன்கள் இருக்கின்றன.

இன்னும் இதன் விலையை அறிவிக்கவில்லை கியா. அநேகமாக 10 - 16 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலை எதிர்பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிரோஸ் பற்றி உங்க கமென்ட்ஸ் ப்ளீஸ்!