`தளபதி’ கெட்டப்பில் சுற்றிய ரசிகர்கள்! - 1991 தீபாவளி நினைவுகள் #DiwaliCinema
Kohli : 'கோலிக்கு ஆஸ்திரேலியா விரித்த வலை; இரண்டாவது முறையாக எப்படி டக் அவுட் ஆனார்?'
அடிலெய்டில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளிடையேயான இரண்டாவது ஓடிஐ போட்டி நடந்து வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் டக் அவுட் ஆன கோலி, இந்தப் போட்டியிலும் ரன் கணக்கை தொடங்காமல் கோலி டக் அவுட் ஆகியிருக்கிறார். கோலியை எப்படி வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி?

பெர்த்தில் ஸ்டார்க்கின் ஓவர் தி விக்கெட் அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் டெலிவரிக்கு பேட்டை விட்டு பேக்வர்ட் பாய்ண்ட்டில் கேட்ச் கொடுத்து கோலி டக் அவுட் ஆகியிருந்தார். இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பவர்ப்ளேயில் மிகத் தீவிரமாக சரியான லெந்தை பிடித்து வீசி திணறடித்தனர். குறிப்பாக, ரோஹித் சர்மாவை ஸ்ட்ரைக்கில் நிற்க வைத்து ஹேசல்வுட் திணறடித்தார்.
ரோஹித் பதற்றத்துக்குள்ளானார். அவரால் சரியாக கனெக்ட் செய்யவே முடியவில்லை. ஸ்டார்க்கும் ஹேசல்வுட்டும் வீசுகையில் ரோஹித்தும் கில்லும் ரிஸ்க் எடுக்கவில்லை. இதனால் ஸ்டார்க்கின் ஸ்பெல்லை இரண்டே ஓவர்களில் முடித்துவிட்டு பார்ட்லெட்டுக்கு ஓவரை கொடுத்தார் மார்ஷ். ரோஹித் ஒரு பக்கம் திணறியதால், ரன்ரேட் அழுத்தம் ஏறி கில் கொஞ்சம் அதிரடியாக ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டார். அது ஆஸ்திரேலியாவுக்கு பலனை கொடுத்தது. ஒரு டைட்டான டெலிவரியில் மிட் ஆபை க்ளியர் செய்ய நினைத்து முடியாமல் கில் வெளியேறினார்.

நம்பர் 3 இல் விராட் கோலி வந்தார். அதே பார்ட்லட் ஓவர்தான். பீல்டிங்கை மட்டும் மார்ஷ் கொஞ்சம் மாற்றினார். கூடுதலாக ஒரு ஸ்லிப்பை நிற்க வைத்து மூன்று ஸ்லிப்களோடு அட்டாக் செய்தார். இந்த முறையும் குட் லெந்தில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிதான் கோலிக்கு வலை விரித்தனர். ஆனால், இப்படி வந்த முதல் இரண்டு பந்துகளையும் கோலி மிக ஜாக்கிரதையாக லீவ் செய்தார்.
அடுத்த பந்தும் குட் லெந்த் ஆப் ஸ்டம்புக்கு வெளியே, கோலி டிபண்ட் செய்தார். நான்காவது பந்தில் பார்ட்லெட் லெந்தை மாற்றினார். குட் லெந்திலிருந்து புல் லெந்துக்கு சென்றார். பந்தும் ஸ்டம்ப் லைனில் இன்கம்மிங்காக டைட்டாக வந்தது. இதை கோலி எதிர்பார்த்திருக்கவில்லை. பேடில் வாங்கினார். அம்பயர் நேராக அவுட் கொடுத்தார். கோலி ரிவியூவ் கூட எடுக்கவில்லை. நான்கே பந்துகளில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

அடிலெய்டு கோலிக்கு பிடித்தமான மைதானம். கடந்த போட்டியில் டக் அவுட் ஆனவர், இந்த முறை அடிலெய்டில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் ஏமாற்றமே!