விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
Kumbh Mela: கும்பமேளாவில் மாலை விற்ற பெண் யூடியூப் பிரபலமான கதை; யார் இந்த வைரல் பெண் Monalisa?
மகாகும்பமேளா விழா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கி, முழு வேகத்தில் நடந்து வருகிறது. கும்பமேளாவிற்குச் சாதுக்களும், முனிவர்களும், பிரபலங்களும் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.
கும்பமேளாவில் பூ, ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்து வந்த இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சிவப்பு ஆடையுடன் இளம் பெண் சாது போன்று வசீகரமான தோற்றத்தின் மூலம் காட்சியளித்த அப்பெண் இப்போது மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். அவர் மாலை விற்பனை செய்யும் விதம் கும்பமேளாவிற்கு வந்த பக்தர்கள் மற்றும் மீடியா பிரபலங்களை மிகவும் கவர்ந்தது. அவர் மாலை வியாபாரம் செய்யும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
அவர் மிகவும் வைரலானதால் அவரைச் சுற்றி எப்போதும் கேமரா மேன்கள் சூழ்ந்திருந்தனர். இதனால் அவரால் தொடர்ந்து மாலை மற்றும் உத்தராட்ச மாலைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர் தனது சொந்த ஊரான இந்தூருக்குச் சென்றுவிட்டார். இந்தூருக்குச் சென்றவுடன் அழகு நிலையம் ஒன்றுக்குச் சென்று தனது அழகை மேம்படுத்திக்கொண்டார்.
அவர் சலூன் கடையில் மேக்கப் செய்து கொள்ளும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதோடு கும்பமேளாவில் தனக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த மோனலிசா, சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, அதில்தான் சலூனில் மேக்கப் செய்து கொண்ட வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
டிவிட்டர் பக்கத்திலும் அதனைப் பகிர்ந்துள்ளார். பெண் துறவியைப் போன்று சிவப்பு ஆடையுடன், பாசி மாலை அணிந்து அவர் தனது முடியைச் சலூனில் சரி செய்யும் வீடியோவை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மோனலிசாவை முன்மாதிரியாக வைத்து சிலர் ஓவியம் வரைய ஆரம்பித்துள்ளனர். மோனலிசாவும் தினமும் புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.
மோனலிசாவைப் போன்ற உருவத்துடன் இருக்கும் மோனலிசா போஸ்லே அடுத்தகட்டமாக டிவி ஷோவில் நுழைவது குறித்துப் பரிசீலித்து வருகிறார். மாலை விற்பனை செய்த பெண் இப்போது சோசியல் மீடியா பிரபலமாகி இருக்கிறார். அவரை சோசியல் மீடியாவில் பலரும் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே கும்பமேளாவில் புல்லட் பாபா, கோல்டன் பாபா, ஐ.ஐ.டி பாபா என்று ஏராளமான பாபாக்கள் பிரபலம் அடைந்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs