செய்திகள் :

Live Budget 2025 : இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்... குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது!

post image

நிர்மலா சீதாராமனின் 8-வது பட்ஜெட்..!

2025- 2026-ம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்துவார். காலை 11 மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்வில், இரு அவை உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், மக்களவையில் பிப்ரவரி 3, 4 ஆகிய இரு தினங்கள் நடைபெறும். இதற்கிடையில், நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்வார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்த பட்ஜெட் தாக்கல் மீது மூன்றுநாள்கள் விவாதம் நடக்கும். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 6-ம் தேதி விவாதங்களுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 27 அமர்வுகள் கொண்ட இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்கட்ட அமர்வு 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டாம்கட்ட அமர்வு மார்ச் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதிவரை நடக்கும் எனக் கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை சிறப்பாக நடத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

NTK: ``சங்கியாக செயல்பட முடியாது அண்ணா..." - நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் கட்சியிலிருந்து விலகல்

நாம் தமிழர் கட்சியிலிருந்து மாவட்ட செயலாளர்கள் முதல் தொண்டர்களை வரை பலரும் தொடர்ச்சியாக விலகி மற்ற கட்சிகளில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வரிசையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி த... மேலும் பார்க்க

``ஞானசேகரன் அலைபேசியில் யார் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை வெளியிடுவேன்" - அண்ணாமலை அதிரடி

மதுரை மாவட்டம், அ.வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்க வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, ``பாஜக, கொண்டு வராத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தது, மக்க... மேலும் பார்க்க

TVK: 'முன்னாள் விசிக நிர்வாகி; இந்நாள் அதிமுக நிர்வாகி..!' - பரபரக்கும் பனையூர்!

தவெகவில் இணைவதற்காக அதிமுகவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் CTR நிர்மல் குமார் பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்திருக்கிறார். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயல... மேலும் பார்க்க

Union Budget 2025 : 'மகாலட்சுமியை பிராத்திக்கிறேன்...' - பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேச்சு

நாளை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. அதில், "நாளை தாக்கல் ஆக உள்ள பட்ஜெட் தேசிய வளர... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பசியோடு காத்திருந்த மாணவர்கள்; 5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர்; கொந்தளித்த பெற்றோர்

தஞ்சாவூர், அறிஞர் அண்ணாநூற்றாண்டுஅரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனிதநேய வார நிறைவு விழாவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும்உயர் கல்வித்துறைஅமைச்சர் செழியன் ... மேலும் பார்க்க

'உணவில் பாகுபாடு இருந்ததைக் கண்டு MGR கொந்தளித்தார்!' - Journalist Manaa Interview | Jayalalithaa

இந்த வீடியோவில், மூத்த பத்திரிக்கையாளரான திரு. மனா அவர்கள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆரம்ப கால ஆசைகளைப் பற்றியும், மேலும் முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் சிவாஜி கணேச... மேலும் பார்க்க