Maharashtra: `35 இல்லை இனி 20 மார்க் எடுத்தாலே பாஸ், ஆனால்...' - மகாராஷ்டிரா அரசின் `புது' திட்டம்
பொதுவாக பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அதுதான் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது மகாராஷ்டிரா பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இனி கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் 100-க்கு 35 மதிப்பெண்கள் எடுக்க தேவையில்லை. 20 மதிப்பெண்கள் மட்டும் எடுத்தாலே போதுமானது என்று தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தை மகாராஷ்டிரா கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்தான் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய பாடத்திட்ட கொள்கையின் கீழ் இத்திட்டம் அறிமுகமாக இருக்கிறது. ஆனால் 20 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வி கல்வி படிக்கும்போது கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பான பாடங்களைத் தேர்வு செய்யமுடியாது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிரா கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குநர் அஹுல் ரேகாவார், " இந்த மாற்றம் பள்ளிக் கல்வித் துறையால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
புதிய பாடத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் போது இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்" என்று கூறியிருக்கிறார். மகாராஷ்டிரா பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தோல்வி அடைவதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY