செய்திகள் :

Mamitha Baiju: "எனக்கு டாக்டர் ஆகணும்னுதான் ஆசை; ஆனா" - நடிகை மமிதா பைஜூ

post image

'பிரேமலு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படங்களில் பிசியாக நடித்து வருகிறார் மமிதா பைஜூ.

சமீபத்தில் வெளியான 'டியூட்' படத்தில் நடித்திருந்தார்.

தவிர விஜய்யின் 'ஜனநாயகன்', 'சூர்யா 46', 'தனுஷ் 54' படத்திலும் மமிதா பைஜூ நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மலையாள ஊடகமான 'மனோரமா'வுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேசியிருக்கிறார்.

தந்தையுடன் மமிதா பைஜூ
தந்தையுடன் மமிதா பைஜூ

"சிறுவயதில் என்னுடைய அப்பாவைப் போல எனக்கும் டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை.

நான் அப்பாவின் கிளினிக்கிற்குச் சென்றால் அங்குள்ள அனைவரும் என்னை 'பேபி டாக்டர்' என்று அழைப்பார்கள்.

நோய் குணமடைந்து மகிழ்ச்சியாக அப்பாவிடம் வந்து நன்றி கூறும் நோயாளிகளைப் பார்த்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.

அந்தத் தொழில் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. சினிமா என் வாழ்க்கையில் தற்செயலாக வந்ததுதான்.

நான் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது 'சர்வோபரி பலக்காரன்' என்ற படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் படத்தை என் அப்பாவின் நெருங்கிய நண்பரான அஜி அங்கிள்தான் தயாரித்தார்.

மமிதா பைஜூ
மமிதா பைஜூ

அவர்தான் என்னைத் தொடர்ந்து ஆடிசனுக்குப் போகச்சொன்னார். அந்தப் படத்திற்குப் பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

மெதுவாக, நடிப்பை நான் ரசிக்கத் தொடங்கினேன், சினிமாவுடன் எனக்கு ஒரு பிணைப்பு உருவானது.

என் பெற்றோரிடம் சினிமாதான் என் வாழ்க்கைப் பாதை என்று சொன்னேன். அவர்களும் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள்" என்று மமிதா பைஜூ பகிர்ந்திருக்கிறார்.

Mamitha Baiju: 'எனக்கு 15 கோடி சம்பளமா?'- மமிதா பைஜூ விளக்கம்

'பிரேமலு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் மமிதா பைஜு. சமீபத்தில் வெளியான 'டியூட்' படத்தில் நடித்திருந்தார். தவிர சூர்யாவின் 'கருப்பு', விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் ந... மேலும் பார்க்க

Lokah Chapter 1: 'லோகா'வின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு ; வெளியான மோலிவுட் அப்டேட்!

கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது 'லோகா அத்தியாயம் 1: சந்திரா' திரைப்படம்.இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடி... மேலும் பார்க்க

Lokah Chapter 1: தீபாவளிக்கு 'லோகா'வின் ஓடிடி ரிலீஸ்; வெளியான மோலிவுட் அப்டேட்!

கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது 'லோகா அத்தியாயம் 1: சந்திரா' திரைப்படம்.இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடி... மேலும் பார்க்க

Haal: ``பீப் பிரியாணி' காட்சிக்கு சென்சார் கட்" - நீதிமன்றத்தில் இயக்குநர் போர்கொடி!

நடிகர் ஷேன் நிகம் நடிப்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான வீர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஹால். இந்தப் படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், இந்தப் படத்து... மேலும் பார்க்க

Mohanlal: "16 ஆண்டுகளாக ராணுவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன்" - மோகன்லாலைக் கௌரவித்த இந்திய ராணுவம்

சமீபத்தில் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருந்தது. பெருமைமிகு இந்த அங்கீகாரத்தைப் பெற்ற இந்த சூப்பர் ஸ்டார் நடிகருக்கு இந்திய திரையுலகமே வாழ்த்துகளைத் தெரிவித்தது. மலையாள சினிம... மேலும் பார்க்க

சென்னை: துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை; பின்னணி என்ன?

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்குச் சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்கிறார் துல்கர்... மேலும் பார்க்க