செய்திகள் :

Manmohan Singh: "நான் சைலன்ட் பிரைம் மினிஸ்டரா?" - மன்மோகன் சிங் அன்று சொன்ன பதில்

post image
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார்.

அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மு.க ஸ்டாலின் உள்ளிட்ட  அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்திருக்கிறார். பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறார். குறிப்பாக 2008-ல் உலகமே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்தியாவில் திறமையுடன் பொருளாதார நெருக்கடியை சமாளித்திருக்கிறார்.

மன்மோகன் சிங்

அவர் மறைவைத் தொடர்ந்து அவர் குறித்த பல்வேறு செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் அளித்த பதில் ஒன்று இணையத்தில்  வைரலாகி இருக்கிறது. ஒரு முறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவரிடம் அமைதியான பிரதம மந்திரி என்று உங்களை விமர்சனம் செய்வதை  எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “ நீங்கள் அமைதியான பிரதம மந்திரியா? என்ற உங்கள் கேள்விக்கானப் பதில் நான் எழுதிய ‘Changing India’ என்ற  புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கு அஞ்சும் பிரதமர் நான் இல்லை.   அடிக்கடி நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசுவேன். 2005 ஆம் ஆண்டு வாஷிங்டனில் நேஷனல் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேச வேண்டாம் என்று அதிகாரிகள் என்னை  அறிவுறுத்தினர்.

மன்மோகன் சிங்

ஆனால் நான் வெற்றிகரமாக அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினேன். என்னுடைய சாதனைகளைப் பற்றி நானே எப்போதும் பேசிக்கொள்ள மாட்டேன். நான் மேற்கொள்ளும்  ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும் நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசுவேன். நான் அமைதியான பிரதமர் இல்லை” என்று மன்மோகன் சிங் பதிலளித்திருக்கிறார்.    

பாமக: `நான் சொல்வதுதான் முடிவு’ சீறிய ராமதாஸ் ; மைக்கை வீசிய அன்புமணி - கருத்து மோதலின் பின்னணி?

அப்செட் அன்புமணி!ராமதாஸ் அறிவிப்பு...புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டானூரில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.க-வின் சிறப்பு மாநில பொ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஜனவரி 12-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் ஏன்?’ – அமைச்சர் சொல்வதென்ன ?

புதுச்சேரியில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும், இருசக்கர வாகனங்களின் பெருக்கத்தினாலும் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் 2025 ஜனவரி 1-ம் தே... மேலும் பார்க்க

'புதிய சர்கஸ் கம்பெனியால், பழைய சர்கஸ் கோமாளிகள் வேடம் அணிகிறார்கள்' - டி.ஆர்.பி ராஜா

திமுக கோவை மண்டல ஐடி விங் ஆய்வு கூட்டம் கோவை சூலூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக ஐடி விங் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி... மேலும் பார்க்க

Manmohan Singh: `என் மகனின் கல்விச் செலவுக்கு உதவ முன்வந்தார்’ - நெகிழ்ந்த மலேசிய பிரதமர் இப்ராஹிம்

இந்திய வரலாற்றில் புறக்கணிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். இவரின் மறைவுக்கு உலக அளவில் பல்வேறு தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மன்மோகன் சிங்கின் தன்மையான ஆளுமையும் அ... மேலும் பார்க்க

'குடும்பத்தினர் அதானியை சந்திக்கவில்லை என முதல்வர் சொல்வாரா?' - ஆதாரம் இருக்கு என்கிறார் ஹெச்.ராஜா

" 'அம்பேத்கர் என்று கூறுவதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்ற அமித் ஷாவின் கருத்து சரிதானா?""நாடாளுமன்றத்தில், அமைச்சர் அமித் ஷா ஒன்றரை மணி நேரம் ... மேலும் பார்க்க