செய்திகள் :

Manoj Bharathiraja: "எதிர்பாராத இழப்பு; பாரதிராஜாவுக்கு ஆறுதல்..." - ஸ்டாலின் இரங்கல்

post image

இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா தனது 48 வயதில் காலமானார். சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.

நடிகராகவும் இயக்குநராகவும் திரையுலகுக்குப் பங்களிப்பைச் செலுத்திய அவரது எதிர்பாராத இழப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், "நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

manoj bharathiraja

தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.

இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பதிவிட்டுள்ளார்.

PR04: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார்... 'PR04' பட பூஜை | Photo Album

PR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜை மேலும் பார்க்க

Manoj Bharathiraja:`சிகப்பு ரோஜாக்கள் 2'-வில் ரஜினி மருமகன் ஹீரோ - இது மனோஜ் பாரதிராஜவின் பெருங்கனவு

இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா இயற்கையை எய்தியிருக்கிறார். இதயப் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த அவருக்கு திடீரென நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவரின் உ... மேலும் பார்க்க

மனோஜ் பாரதிராஜா: நல்ல கதை உனக்கு வச்சுருக்கேன்னு சொன்னாரு; இப்போ இப்படி ஆகிருச்சு - கலங்கும் சூரி

இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று (25.03.2025) காலமானார். இதய பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று ஓய்வில் இருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவரின் மறைவிற்கு அரசியல்... மேலும் பார்க்க

மனோஜ் பாரதிராஜா: "மன அழுத்தம் அனைத்தையும் தாங்கிக் கொண்டு..." - திரைப் பிரபலங்கள் இரங்கல்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்ச் 25) மாரடைப்பால் மரணமடைந்தார்.அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்ற... மேலும் பார்க்க

மனோஜ் பாரதிராஜா: "ரொம்ப பக்குவப்பட்ட பையன்; ஆனா இந்த வயசுல..." - திரைப் பிரபலங்கள் இரங்கல்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா இயற்கையை எய்தியிருக்கிறார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி... மேலும் பார்க்க