ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
Meenakshi : ``மக்கள் என்னை ஒரு அம்மாவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பயந்தேன்" - மீனாட்சி சவுத்ரி
தி கோட், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. தி கோட் படத்தை விட லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடம்பிடித்தார் மீனாட்சி. தி கோட் படத்தில் நடித்தது குறித்துப் பேசிய அவர், "நடிகர் விஜய்யின் 'தி கோட்' படத்தில் நடித்த பிறகு, நான் பலரால் ட்ரோல் செய்யப்பட்டேன். அதனால் ஒரு வாரம் மன அழுத்தத்திற்கு ஆளானேன்." எனக் குறிப்பிட்டிருந்தார். அப்போதே இவரின் இந்தக் கருத்து விஜய் ரசிகர்களால் விமர்சனத்துக்குள்ளானது.

இந்த நிலையில், குறுகிய காலத்தில், மகேஷ் பாபு, விஜய், துல்கர் சல்மான் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று தென்னிந்திய சினிமாவில் கவனம் பெற்றுவரும் இவர் நடிப்பில் தற்போது வெளியான 'சங்கராந்திகி வாஸ்துனம்' எனும் தெலுங்கு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.
இதற்கிடையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், `` லக்கி பாஸ்கர் படத்தில் ஒரு அம்மாவாக நடிப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. மக்கள் என்னை ஒரு அம்மாவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நான் பயந்து, கவலைப்பட்டேன். சுமதி கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். ஆனால், மக்கள் என்னை சுமதியாகவே ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்

அந்த வேடத்திற்கு நான் தகுதியானவள் என்பதை இப்போது ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நடிகையாக, எனக்கு வழங்கப்பட்ட கதாப்பத்திரங்கள் அனைத்துக்கும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 2024 என் வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆண்டாகும். என் தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது." என்றார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play