செய்திகள் :

Mental Health: டீன் ஏஜில் வரக்கூடிய ஸ்ட்ரெஸ்; காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்..!

post image

ரீட்சை பயம், பெற்றோர், ஆசிரியர்களின் நம்பிக்கையை எப்படிப் பூர்த்திசெய்வது என்ற பயம் எனப் பள்ளி, கல்லூரி செல்லும் டீன் ஏஜினர் மத்தியில் தற்போது மனஅழுத்தம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, எதிலும் கவனம் செலுத்த இயலாமை, தூக்கம் எனப் பல பிரச்னைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்கோ, ஒன்றிரண்டு பேருக்கு அல்ல... அதிகப்படியானவர்கள் இந்த மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். டீன் ஏஜ் ஸ்ட்ரெஸ்ஸுக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் சேல்விழி சுப்பிரமணியன்.

Teen Age Stress
Teen Age Stress

பெரும்பாலான இளவயதினரின் மனஅழுத்தத்துக்கு அவர்களின் படிப்பே காரணமாக இருக்கிறது. 10, 12-ம் வகுப்புகளில் அவர்களின் நாள் காலை 4 மணியில் இருந்தே தொடங்கிவிடுகிறது. 6 மணிக்கு கணக்கு டியூஷன், 7 மணிக்கு கெமிஸ்ட்ரி டியூஷன் முடித்துப் பள்ளிக்குச் சென்றால்... இரவு வரை வகுப்புகள், செயல்முறை வகுப்புகள், தேர்வுகள்... அவற்றை முடித்து வீட்டுக்கு வந்தால், ரெக்கார்டு ரைட்டிங், மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ் எனத் தொடர்ந்து அவர்களின் தினசரி நாட்கள் மனஅழுத்தத்திலேயே கழிகிறது. இதில், நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று, விளையாட்டு உள்பட பொழுதுபோக்குகளுக்குத் தடை வேறு.

‘நான் சென்ட்டம் எடுத்தேன், என் மகன் நீ, கண்டிப்பாக என்னைவிட அதிகமாகத்தான் எடுக்க வேண்டும். அதுதான் எனக்குப் பெருமை’ என்றும், ‘பக்கத்து வீட்டு ப்ரியாவைவிட நீ நிறைய மதிப்பெண் எடுத்தால்தான் எனக்கு கெளரவம்’ என்றும் சொல்லும்போது, அது மனஅழுத்தத்தை அதிகரித்துவிடுகிறது.

உறவுகளில் ஏற்படும் விரிசல், நட்பில் பிரிவு, பெற்றோரிடம் சண்டை போன்றவற்றைக் கடக்க முடியாமல் தடுமாறும் பருவம் இது. சமூகத்தில் பல ஜீரணிக்க முடியாத விஷயங்கள் நடக்கும். அதனைச் சகித்துக்கொள்வதற்கு மனம் பக்குவப்படாமல் இருக்கும்போது மனஅழுத்தம் ஏற்படும்.

பல வருடங்களாக ஒரே வீட்டில் இருந்துவிட்டு புதிதாக வேறு வீடு மாறும்போதும், நண்பர்களை விட்டு புதிதாக வேறு பள்ளிக்குச் செல்லும்போதும் புதிய சூழல் ஏதோ இழந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். இந்த எண்ணம் யாரோடும் சீக்கிரத்தில் சேரவிடாமல் தனித்தே இருக்கச்செய்யும்.

Teen Age Stress
Teen Age Stress

சக மாணவனைவிட உயரம் குறைவாக இருக்கிறோம், நண்பனைவிட கறுப்பாக இருக்கிறேன், அவன் நன்றாகப் படிக்கிறான், என்னால் படிக்க முடியவில்லை, அவளை எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால், என்னிடம் யாரும் பேசுவதுகூட இல்லை என்பதைப் போன்ற தாழ்வு மனப்பான்மையும் மனஅழுத்தத்துக்குக் காரணம்.

அடிக்கடி குடும்பத்தில் பெற்றோர்களிடையே சண்டை, வாக்குவாதம், உடன்பிறப்புகளோடு சண்டை, பெற்றோர்கள் காட்டும் பேதம், முக்கியத்துவம் போன்றவையும் மனஉளைச்சலுக்குக் காரணமாகும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்காமல், வேலையில் மூழ்கி இருத்தல், அவர்கள் மேல் அக்கறையும், கவனமும் செலுத்தாமல் இருப்பது, அவர்களின் எண்ணங்களைப் பொறுமையாகக் கேட்காமல் கோபப்படுவது, வெறுப்பைக் காட்டுவது என இருந்தால், குழந்தைகளுக்கு நிறைய எதிர்மறை எண்ணங்கள் வருவதோடு, மனஅழுத்தமும் ஏற்படும்.

Family
Family

பருவம் அடைந்த பிறகு இருபாலருக்கும் ஒருவர் மீது ஒருவர்க்கு ஏற்படும் ஈர்ப்பு, காதலாக மாறும். அந்த உறவுகளை எப்படிக் கையாள்வது எனப் புரியாமல் மனதில் எப்போதும் எதையாவது நினைத்து வருந்திக்கொண்டே இருப்பார்கள். இந்த வயதில்தான் காதல் தோல்வி என்று தவறான முடிவுகளை எடுத்து வாழ்க்கையையே கெடுத்துக்கொள்வார்கள்.

எப்போதும் கவலையாக, நம்பிக்கையற்ற நிலையிலேயே இருப்பார்கள். மந்தமாகவோ விபரீதமாகவோ நடந்துகொள்வார்கள். வழக்கத்துக்கு மாறாகக் கோபப்படுதல், எதுவும் சரியாக நடப்பது இல்லை என்ற எண்ணம், நாம் எதற்கும் தகுதி இல்லை என்ற தாழ்வுமனப்பான்மை மேலோங்கி இருக்கும். இவ்வாறு, உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்படையாக இருக்கும்.

Teen Age Stress
Teen Age Stress

பதற்றம் அதிகமாக இருக்கும். படபடப்போடு இருப்பார்கள். நட்பு வட்டத்தில் இருந்தும், கூட்டு நடவடிக்கைகளில் இருந்தும் விலகி இருப்பார்கள். போதைப் பொருள்கள் பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக உறங்குவது, அழுவது, பள்ளி, கல்லூரி செல்ல மறுப்பது, குறைவாகச் சாப்பிடுவது, உடம்பில் சத்து இல்லாதது போல் உணர்வது, எப்போதும் உணர்ச்சி நிலையில் ஏற்ற இறக்கத்தோடு இருப்பது, பெற்றோர்களை மதிக்காமல் நடந்துகொள்வது, தன் தோற்றத்தின் மீது அக்கறை இல்லாமல் இருப்பது, எல்லா நேரமும் ஏதோ சிந்தனையில் இருப்பது போன்ற நடவடிக்கைகள் காணப்படும்.

எதையும் நினைவில் வைக்க முடியாமல் சிரமப்படுவர். சரியான, முக்கிய முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம், எதைப் பற்றியாவது யோசனை அல்லது பேச்சுக்களில் மூழ்கிப்போதல், கவனச்சிதறல், பகுத்தறியும் ஆற்றல் குறைந்து, தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது, திட்டமிடுதலில் பிரச்னை போன்றவை தோன்றும்.

Teen age
Teen age

பசியின்மை அல்லது அதீதப் பசி, உடல் நிலை சரி இல்லாமல் இருப்பது, உடல் எடை திடீரென அதிகரித்தல் அல்லது குறைதல், மயக்கம், சுவாசப் பிரச்னை, அச்சவுணர்வு, அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுதல், அடிக்கடி சளிப் பிடித்தல், மாதவிடாயில் மாற்றம் உடலியல் மாற்றங்கள் ஏற்படும்.

பெற்றோர்கள் தங்கள் வேலைகளைத் தாண்டி குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களின் எண்ணங்கள், வாழ்க்கையைக் குறித்த லட்சியங்கள், அவர்களின் பிரச்னைகள், உடலில் ஏற்படும் தொந்தரவுகள் குறித்துப் பொறுமையாகக் கேட்டு ஆலோசனை கூற வேண்டும்.

“உன்னிடம் திறமை உள்ளது; உன்னால் முடியும், நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்” என்று அவர்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளைப் பேச வேண்டும்.

ன்பாக, நட்பாகப் பழக வேண்டும். கோபப்படாமல், திட்டாமல், அடிக்காமல் ஆறுதலாகப் பேசும்போது பிள்ளைகளுக்கு எதையும் மறைக்காமல் சொல்லும் எண்ணம் வரும். மறைக்காமல் வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லும்போது பிரச்னைகளில் இருந்து தப்பித்து விடுவார்கள். இதனால், மன அழுத்தம் வருவதை முன்கூட்டியே தவிர்க்க முடியும்.

teen age
teen age

ழுங்கற்ற உணவுப்பழக்கம்கூட உடலிலும் மனதிலும் சோர்வை ஏற்படுத்தும் என்பதால், சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட பழக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்யவும் பழக்க வேண்டும்.

னஅமைதியைத் தரக்கூடிய பொழுதுபோக்குகளான ஓவியம் வரைவது, புத்தகம் படிப்பது, நல்ல இசை கேட்பது போன்றவற்றை செய்ய பிள்ளைகளுக்கு தடைபோடக் கூடாது.

பிள்ளைகள் அவசியம் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். நன்றாகத் தூங்கி எழுந்தாலே அவர்கள் உடலும் மனமும் நன்கு செயல்படும்.

குழந்தைகளுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யக் கட்டாயப்படுத்தக் கூடாது. பிடித்தவற்றைச் செய்யக் கூடாது என்று தடை விதிக்காமல், உற்சாகம் கொடுக்க வேண்டும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Memory: உங்களுக்கு இருப்பது ஞாபக மறதியா அல்லது வியாதியா? நிபுணர் விளக்கம்!

உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். இவை எல்லாம் உங்களுக்கு நடந்திருக்கிறதா என யோசியுங்கள்.‘ஆபீஸுக்கு இன்னைக்கு என்ன டிரெஸ் போடலாம்?’ என யோசித்துக்கொண்டே செல்போனை பாத்ரூமில் மறந்து வைத்திருப்போம்.எதையோ எடுக்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 32. வேலைக்குச் செல்கிறேன். வீட்டிலும் சமையல், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, மாமனார், மாமியாரின்தேவைகளைப் பார்த்துப் பார்த்து செய்வது என எல்லா பொறுப்புகளையும் மறுக்காமல் ஏற்ற... மேலும் பார்க்க

`Cocomelon’ முதல் `Free Fire’ வரை... நம் குழந்தைகளுக்கு நல்லதை கொடுக்கிறோமா? - ஓர் அலசல்

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் அல்லது வீடியோக்கள் என்றதும் நம் கற்பனையில் தோன்றுவது எக்கச்சக்க வண்ணங்கள், எளிமையான பாடல்கள், எண்ணமுடியாத கற்பனைகள், நேரடியான பேச்சுகள்... போன்றவைதான். கிட்டத்தட்ட இதே விஷ... மேலும் பார்க்க