மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு: பேராசிரியா் விவரங்களை பகிர அவகாசம் நீட்டிப்பு
NASA: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப மேலும் தாமதமாகலாம் - காரணம் என்ன?
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்ப 2025 மார்ச் மாத இறுதி வரை ஆகலாம் எனக் கூறியிருக்கிறது NASA.
க்ரூ-10 என்ற பத்தாவது விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் மிஷனில் விண்வெளி வீரர்கள் நிக் ஹேக் மற்றும் அலெக்சாண்டர் கோர்புனோவ் உடன் பூமி திரும்ப இருந்தார் சுனிதா வில்லியம்ஸ். க்ரூ-10 4 பேர் பயணிக்கும் மிஷன். இதை லான்ச் செய்வதற்கான தேதி மீண்டும் தள்ளிச்சென்றிருக்கிறது.
பிப்ரவரியில் நடக்கவிருந்த லான்ச் மார்ச் மாத கடைசிக்கு தள்ளிச் சென்றிருக்கிறது. இந்த மிஷனை செயல்படுத்தும் டிராகன் விண்கலம் செயல்படுவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.
குழுவினர் புதிதாக மிஷன் குறித்த விஷயங்களைக் கற்றுக்கொள்ள இந்த கால இடைவெளி உதவும் என்கிறது நாசா. இந்தமுறை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் தேதியை நாசா அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
இந்தவருடம் ஜூன் மாதம் 8 நாள் செயல்திட்டத்துடன் விண்வெளி நிலையத்துக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ், பல மாதங்கள் கடந்தும் திரும்பவில்லை. அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், பூமி திரும்புவதற்கு உகந்ததாக இல்லை எனக் கூறப்படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி செய்யும் அறிவியளாலர்களுக்கான வீடுதான் சர்வதேச விண்வெளி நிலையம். பூமியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் வாழ்வதற்கு தேவையான பொருட்கள் அங்கு நல்லபடியாக கொடுக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மட்டுமே தனியாக இல்லை.
மற்ற விண்வெளி வீரர்களான Oleg Kononenko (கமாண்டர்), Nikolai Chub, Tracy Caldwell Dyson, Michael Barratt, Matthew Dominick, Jeanette Epps மற்றும் Alexander Grebenkin ஆகியோர் உள்ளனர்.
விண்வெளி நிலையத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உயிர்காக்கும் படகுகள் போல செயல்படும் கேப்ஸூல்களும் உள்ளன. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சென்ற விண்கலம் பழுதடைந்ததாலேயே அவர்கள் நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் அவர்களுக்காக 4 பேர் செல்லக் கூடிய விண்கலத்தில் இரண்டுபேர் மட்டும் செல்லவிருக்கின்றனர்.