மஹரசங்கராந்தி: தஞ்சாவூர் பெரிய கோயில் நந்திக்கு 2டன் காய், கனி அலங்காரம்; 108 க...
`NDA பக்கம் சாயும் சரத் பவார்?' - மராத்தி மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு
மத்திய அரசு மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி இருக்கிறது. இதையடுத்து வரும் பிப்ரவரி 21-23ம் தேதி வரை டெல்லியில் மராத்தி சாஹித்ய சம்மேளன் மாநாடு நடைபெறுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளன் இந்த மராத்தி இலக்கிய மாநாட்டை நடத்துகிறது. விழா டெல்லியில் நடைபெறுவதால் இவ்விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை சரத் பவார் நேரில் சென்று அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பாக சரத் பவார் நரேந்திர மோடிக்கு கொடுத்துள்ள அழைப்பிதழில், மராத்தி சம்மேளன மாநாட்டின் சிறப்பு குறித்து எடுத்துரைத்துள்ளார். முதல் முறையாக 1878ம் ஆண்டு இம்மாநாடு நடந்தபோது லோக்மான்ய திலக், சாவர்கர் ஆகியோர் கலந்து கொண்டதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதோடு 37வது மாநாட்டை ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். உங்களது ஆட்சிக்காலத்தில் மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருப்பதால் உங்களது கையால் இம்மாநாட்டை தொடங்கி வைப்பது சிறப்பாக இருக்கும் என்று சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை சரத்பவார் மராத்தி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சமீப காலமாக சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணையப்போவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. இதனால் சரத்பவார் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவார் என்றும், சரத்பவார் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சரத்பவார் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்தே இது போன்ற செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது.
இப்போது பிரதமர் நரேந்திர மோடியை விழாவிற்கு வருமாறு சரத்பவார் அழைப்பு விடுத்திருப்பது மேற்கண்ட செய்தியை மேலும் வலுப்படுத்தும்விதமாகவே இருக்கிறது. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு முக்கிய திட்டங்களை நிறைவேற்ற கூடுதல் எம்.பி.க்கள் தேவையாக இருக்கிறது. சரத்பவார் கட்சியில் 8 எம்.பி.க்கள் இருக்கின்றனர். எனவே சரத்பவாரை தங்களது பக்கம் இழுக்க பா.ஜ.கவும் முயன்று வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs