செய்திகள் :

Operation Sindoor: ``மே 9 - இரவு 9 மணி, பாகிஸ்தானுக்கு நல்ல பாடம்..!'' - இந்திய ராணுவத்தின் வீடியோ

post image

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த வீடியோக்களை இந்திய ராணுவம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்றும் இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடி வீடியோவை வெளியிட்டுள்ளது இந்திய ராணுவம்.

அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக, "திட்டமிடப்பட்டது, பயிற்சியளிக்கப்பட்டது மற்றும் முடிக்கப்பட்டது. நீதி வழங்கப்பட்டது" என்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஹேஷ்டேக்குகளாக 'பலமான மற்றும் திறமையான' (#StrongAndCapable) என்றும், 'ஆபரேஷன் சிந்தூர்' (#OpSindoor) என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் இந்திய ராணுவ வீரர் ஒருவர், "இது அனைத்தும் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் இருந்து தொடங்கியது. எங்களுடைய கோபம் உருகிய எரிமலை போல உள்ளது.

Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

அந்த நேரத்தில் ஒரே ஒரு சிந்தனை தான் ஓடிக்கொண்டிருந்தது. அது, 'அவர்கள் தலைமுறைகள் மறக்காதாவறு பாடம் கற்றுத்தர வேண்டும்' என்பது தான்.

இது பழிவாங்கு நடவடிக்கை அல்ல, இது நீதி. மே 9-ம் தேதி இரவு, இரவு 9 மணியளவில் போர் நிறுத்தத்தை மீறிய அனைத்து எதிரி படைகளும் அழிக்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர் வெறும் நடவடிக்கை அல்ல; பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு கற்றுகொடுக்கப்படாத ஒரு பாடம் ஆகும்" என்று பேசியுள்ளார்.

அந்த வீடியோ இதோ...

சிறந்த செயல்திறனுக்காக `சன்சத் ரத்னா விருது' - திமுக எம்.பி. உள்பட 17 பேர் தேர்வு! - முழு விவரம்!

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறந்த செயல்திறனை மதிப்பளிக்கும் விதமாக சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 2010-ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பரி... மேலும் பார்க்க

Trump:``பாகிஸ்தான் மக்கள் புத்திசாலிகள்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்! - காரணம் என்ன?

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் போக்கில் இருநாடுகளுடனும் வர்த்தகத்தை முன்வைத்து பிரச்சனையை தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட முக்கிய வர்த்தகக்... மேலும் பார்க்க

``20 வயதுள்ள 20 பெண்கள்; சார்களுக்கு இரையாக்க கொடூரப் பிடி..'' - திமுக அமைச்சர்களை சாடும் எடப்பாடி

ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எ... மேலும் பார்க்க

``புற்றுநோயால் அவதிப்படும் ஜோ பைடன் நலம் பெற வேண்டுகிறோம்'' - ட்ரம்ப், கமலா ஹாரிஸ், ஒபாமா பதிவு

அமெரிக்கவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன். 1942-ம் ஆண்டு நவம்பர்-20 ல் பிறந்த இவருக்கு தற்போது வயது 82. இரண்டாவது முறையாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே மறதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் சிக்கல்கள... மேலும் பார்க்க