தக்காளி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் கவலை: 25 கிலோ ரூ. 200
Padma Awards: `பத்ம பூஷண்' அஜித்; விருது விழாவில் நெகிழ்ந்த ஷாலினி
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு.
பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்துக்கும், கிரிக்கெட்டர் அஷ்வினுக்கும் பத்ம விருதுகளை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்பட்டது. குடும்பத்துடன் சென்று பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார் நடிகர் அஜித் குமார்.