செய்திகள் :

Pahalgam Attack: அட்டாரி - வாகா எல்லை மூடல் - இந்தியா, பாகிஸ்தான்; யாருக்கு என்னென்ன பாதிப்புகள்?

post image

ஜம்மு காஷ்மீரின் பஹால்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் ஒன்றாக அட்டாரி - வாகா எல்லையை முடியிருக்கிறது.

அட்டாரி - வாகா எல்லை பற்றி...

இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரிப்பது இந்த எல்லை தான்.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஒரே அனுமதிக்கப்பட்ட சாலை வழி வர்த்தக பாதை இது. இதனால், இந்த எல்லை சுங்கம் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளது.

சுற்றுலா ரீதியாகவும் இந்த எல்லை மிக முக்கியமானது. தினமும் மாலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்படும் கொடியிறக்கம் நிகழ்வை பார்க்க பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.

அட்டாரி - வாகா எல்லை
அட்டாரி - வாகா எல்லை

ரூ.3,000 கோடி வர்த்தகம்

இது தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒரே சாலை வழி வணிக பாதை என்பதால் இந்த எல்லை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால், பாகிஸ்தான் மிகுந்த பாதிப்பை சந்திக்க உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சமீபத்திய ஆண்டுகளில் குறைவாகவே உள்ளது, என்றாலும் இந்த மூடல் நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய ஏற்றுமதிகளுக்கு இந்திய சந்தையை நம்பியிருப்பதால் பாகிஸ்தான் இதில் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்கிறார்கள். ஏற்கனவே அந்நாடு பொருளாதார சிக்கலில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கைப்படி, 2023 - 24 ஆண்டில் இந்த வணிகப் பாதை வழியாக ரூ.3,886.53 கோடி வர்த்தகம் நடந்துள்ளது மற்றும் 71,563 பயணிகள் பயணித்துள்ளனர்.

இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?

இந்த எல்லை வழியே ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா காய்கறிகள், சோயா பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் உலர் பழங்கள், பாறை உப்பு, சிமென்ட் போன்றவை இந்த வழி வழியாகத் தான் வருகிறது. இந்த வழியே தான் ஆப்கானிஸ்தானில் இருந்தும், இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும்.

இந்த எல்லை மூடுதலால் சிறு வியாபாரிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிப்படைவார்கள்.

இந்தியா ஆப்கானிஸ்தான் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கு விரைவில் வேறு வழி கண்டுபிடிக்க வேண்டும்.

பாகிஸ்தான் உடனான வர்த்தகத்திற்கு மாற்றாக வேறு நாடுகளை வர்த்தகத்திற்கு தேட வேண்டும். அப்போது இந்த வர்த்தக நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும்.

தொடர் பிரச்னைகள் காரணங்களினால் 2018 - 19 காலக்கட்டத்தில் இருந்து குறைந்து வந்த இந்த வணிகம் இப்போது முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.

சுற்றுலாவிற்கு பாதிப்பா?

கொடியிறக்க நிகழ்வு குறித்து இன்னும் எந்தத் தகவல்களும் சொல்லப்படவில்லை. எனினும் இன்று அந்நிகழ்வுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிகிறது.

"இந்த ரயில் நிலையத்தின் பணியாளர்களில் ஒருவருக்குக்கூடத் தமிழ் புரியல..." - துரை வைகோ வேதனை

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் முக்கிய நகரமாக விளங்கும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இன்று (ஏப்ரல் 24) திடீர் ஆய்வு மேற்கொண்ட திருச்சி எம்.பி.யும் ம.தி.மு.கமுதன்மைச் செயலாளருமான துரை வைகோ, ரயில் ந... மேலும் பார்க்க

Pahalgam : இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் எடுத்த முக்கிய முடிவுகள்; சிம்லா ஒப்பந்தம் ரத்து?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்திய மட்டுமில்லாது உலக நாடுகள் பலவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலு... மேலும் பார்க்க

'நாங்களும் தயார்' - பாகிஸ்தான் உத்தரவை அடுத்து இந்தியா நடத்தி முடித்த ஏவுகணை சோதனை

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி தந்தே ஆக வேண்டும் எனவும், ம... மேலும் பார்க்க

Pahalgam Attack: `இந்தத் தாக்குதலுக்கு காஷ்மீரை அவதூறு செய்யாதீர்கள்’ - கொலை செய்யப்பட்டவரின் மனைவி

மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் மேலாளரான ஷீலேஷ் கலாதியா (44), தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சக ஊழியரின் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இதனிடையே... மேலும் பார்க்க

`சிக்கலில் 3 முக்கிய அமைச்சர்கள்... ஒரே நாளில் வந்த அதிரடி உத்தரவுகள்' - என்ன செய்யப்போகிறது திமுக?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் சூழலில், நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் எடுத்திருக்கும் நடவடிக... மேலும் பார்க்க

`சண்டை போட்டுகொண்டே இருக்க வேண்டியது தான்’ - மீண்டும் முட்டி மோதி கொண்ட ட்ரம்ப், ஜெலன்ஸ்கி

'மீண்டும் மீண்டுமா?' என்பதுப்போல தற்போது மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே மோதல் தலைதூக்கி உள்ளது. சமீபத்தில், ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை லண்டனில் ... மேலும் பார்க்க