செய்திகள் :

Paranthu Po: "இப்படிப்பட்ட படத்தை திரையரங்குகளில் தவற விட்டுவிடாதீர்கள்" -இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

post image

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

பெற்றோர் - பிள்ளைகளுக்கிடையான உறவை, அன்பை பேசும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். சுதந்திரத்தை விரும்பும் குழந்தை, தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லும் இலகுவான கதைக்களம் இது.

பறந்து போ

ராம் - யுவன் காம்போ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் முதலில் யுவன்தான் படம் முழுக்க இசை அமைக்க வேண்டியிருந்தது. ஆனால், யுவன் அந்த சமயத்தில் வேறு சில பெரிய படங்களில் பரபரப்பாக இருந்ததால், இப்படத்தின் பின்னணி இசையை மட்டும் அமைத்திருக்கிறார். பாடல்களை சந்தோஷ் தயாநிதி அமைத்திருக்கிறார்.

இதன் வெளியீட்டையொட்டி சிறப்புத் திரையிடலை படக்குழுவினர் ஏற்பாடு செய்து சினிமா துறையில் இருக்கும் பலருக்கும் இப்படத்தைத் திரையிட்டுக் காட்டி வருகின்றனர்.

அவ்வகையில் சமீபத்தில் அழுத்தமாக கருத்தை நகைச்சுவையாக உரையாடி மனிதம் பேசும் நெகிழ்ச்சியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தை எடுத்து ஹிட் கொடுத்த அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்,, “இயக்குநர் ராமின் 'பறந்து போ' படம் பார்த்தேன். என் இதயம் நிறைந்துவிட்டது. நகைச்சுவை, உணர்வுகளை அருமையாக கையாண்டுள்ளார். மனதில் நிற்கும் இப்படிப்பட்ட படத்தை திரையரங்குகளில் தவற விட்டுவிடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

Maargan: "நடிகர்கள் நாடாளக் கூடாது என்பது விதியல்ல" - அரசியலுக்கு வருவது குறித்து விஜய் ஆண்டனி

லியோ ஜான் பால் இயக்கத்தில்,விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர்நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'மார்கன்'. இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிக... மேலும் பார்க்க

Srikanth: "சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்று இல்லை..." - விஜய் ஆண்டனி சொல்வது என்ன?

லியோ ஜான் பால் இயக்கத்தில்,விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர் நடிப்பில், ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் 'மார்கன்'. இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈ... மேலும் பார்க்க

"100 படங்கள்; 100 பாடல்கள்; அருள்வாய் தமிழ்ப்பேரணங்கே" -20 ஆண்டுகள் பயணம் குறித்து கார்த்திக் நேத்தா

சினிமாவுக்குத்தான் போகணும், பாட்டு எழுதணும் என ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே முடிவு பண்ணி, 2000 வாக்குல சேலத்துல இருந்து சென்னைக்கு வந்தவர். ஆயிரம் ஆசைகளை நெஞ்சில் சுமந்து, முதலில் சென்னை வந்தபோது, அ... மேலும் பார்க்க

Vijay: "உண்மையாகவே தியேட்டரில் பார்க்கணும்" - விஜய் செய்த கால்; நெகிழ்ந்த ராஜு ஜெயமோகன்!

பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் வரும் ஜூலை 18ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் ஸ்டீலர் காட்சி வெளியகி ரசிகர்கள் வ்ரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ... மேலும் பார்க்க