செய்திகள் :

Vijay: "உண்மையாகவே தியேட்டரில் பார்க்கணும்" - விஜய் செய்த கால்; நெகிழ்ந்த ராஜு ஜெயமோகன்!

post image

பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் வரும் ஜூலை 18ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தின் ஸ்டீலர் காட்சி வெளியகி ரசிகர்கள் வ்ரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் விஜய்யின் கைகளை எக்ஸ் வடிவில் வைத்து டாடா காட்டும் ஸ்டைலை நகைச்சுவையாக காப்பி செய்திருக்கிறார் ராஜு.

என்ன சொன்னார் Vijay?

இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் வாழ்த்தியதாக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராஜு. "அன்புக்குரிய தளபதி விஜய் அண்ணாவிடம் இருந்து கால் வந்தது. "வேற லெவல்ப்பா... உண்மையாகவே தியேட்டரில் பார்க்கணும் எனத் தோன்றியது" என்றார்.

வேறு என்ன வேண்டும் எனக்கு?

நான் இன்று தளபதியை சிரிக்க வைத்திருக்கிறேன். இது எனக்கு மிகப் பெரிய விஷயம்.... நன்றி தலைவா!" என ட்வீட் செய்துள்ளார்.

"என் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்திருக்க வேண்டிய நாள்!" என இன்ஸ்டாவில் நெகிழ்ந்துள்ளார் ராஜு.

இதுவரை சின்னத் திரை நிகழ்ச்சிகளிலும், வெள்ளித்திரையில் சிறிய கதாபாத்திரங்களிலும் தோன்றிய ராஜு, முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார்.

2்கே கிட்ஸின் காதல், நட்பில் உள்ள குழப்பங்கள் பற்றி கலகலப்பாக பேசும் படமாக இது இருக்கும் என விகடன் பேட்டியில் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராகவ் மிர்தாத்.

பன் பட்டர் ஜாம் படத்தில், ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிகா என இரு நாயகிகள் இடம்பெற்றுள்ளனர். சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவ தர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஏதோ பேசதானே, தியா தியா பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியிருக்கின்றன.

DNA: "கேரளாவில் எழுத்தாளர்களுக்கு கேரவன் கொடுப்பாங்க..." - போஸ் வெங்கட்

'மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன், போஸ் வெங்கட் போன்றோர் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'DNA'. இப்படம் மக்களிடையே ... மேலும் பார்க்க

DNA: 'அதர்வா ஒரு திறமையான நடிகர், அவர் இல்லையென்றால்...'- நடிகை நிமிஷா சஜயன்

மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் 'DNA'. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிற... மேலும் பார்க்க

"சின்மயியைப் பார்த்து எனக்கு தைரியம் வருது..!" - பாடகி செளந்தர்யா பேட்டி

“முத்த மழை பாட்டுக்கு உலக அளவில் ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கிறது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. சின்மயி அக்கா ரொம்ப பிரமாதமா பாடியிருக்காங்க. இதுல, என்னோட பங்களிப்பு ரொம்ப ரொம்ப சின்னது. என்னையும் நோட்டீஸ் ப... மேலும் பார்க்க

DNA: 'இந்தப் படம் எப்படி மக்களிடம் வரவேற்பை பெறும் என்றெல்லாம் யோசிக்கவில்லை, ஆனால்...'- அதர்வா

மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் 'DNA'. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிற... மேலும் பார்க்க

Good Day: "குடிக்குப் பின்னாலுள்ள சமூக உளவியலைச் சொல்லும்" - தயாரிப்பாளரான நாயகன் பிரித்திவி பேட்டி

சமீபத்தில் நடந்த 'குட் டே' படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இயக்குநர் ராஜுமுருகன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எனப் பலரும் தங்களுக்கு இருந்த குடிப் பழக்கம் பற்றியும், அதனை நிறுத்தி விட்டது குற... மேலும் பார்க்க