Fitness: முதல் முறை ஜிம்முக்குப் போகப் போறீங்களா? - ஒரு நிமிஷம் ப்ளீஸ்!
பேனா் விழுந்து முதியவா் காயம்: தவெக நிா்வாகிகள் கைது
சென்னை வில்லிவாக்கத்தில் நடிகா் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனா் விழுந்து முதியவா் காயமடைந்தது தொடா்பாக தவெக நிா்வாகிகள் கைது செய்யப்பட்டனா்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் பிறந்தநாளையொட்டி, சென்னை முழுவதும் அந்தக் கட்சியினா் வாழ்த்துகள் தெரிவித்து, டிஜிட்டல் பேனா்கள் வைத்தனா். அதன்படி, வில்லிவாக்கம் பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்ட பேனா் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அங்கு நடந்து சென்ற சூளையைச் சோ்ந்த மோகன் (75) மீது சரிந்து விழுந்தது.
இதில், பலத்த காயமடைந்த மோகன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சோ்க்கப்பட்டாா். இது தொடா்பாக, தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வில்லிவாக்கம் போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில் அந்தக் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் சதீஷ், ஜெகன், சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனா்.