Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூ...
Rachitha: ``இப்படி இறங்கிட்டாங்களேன்னு பேசறது கொஞ்சம் வருத்தமா இருக்கு" - டான்ஸ் மாஸ்டர் மானஸ்
பிக் பாஸ் காம்பினேஷனில் 'ஃபயர்'
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவரும் 'பிக்பாஸ் அல்டிமேட்'டின் டைட்டில் வின்னருமான பாலாஜி முருகதாஸும், சரவணன் மீனாட்சி தொடரின் வழியே கவனம் ஈர்த்தவரும், பிக் பாஸ் போட்டியாளருமான ரச்சிதாவும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'ஃபயர்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மெது மெதுவாய்' பாடல் காட்சி வெளியாகி பரபரப்பாகி இருந்தது. இந்தப் பாடலில் ரச்சிதா கிளாமராக நடித்திருந்தது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. அந்தப் பாடல் காட்சிக்கு நடனம் அமைத்தவரும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான மானஸிடம் பேசினோம்.
''ஃபயர்' படத்துல மொத்தம் ரெண்டு சாங். ரெண்டுக்குமோ கோரியோ பண்ணியிருக்கேன். ஒரு பாட்டு கல்யாண சாங். அந்தப் பாட்டை ஒரே நைட்ல அதாவது ராத்திரி ஒன்பது மணிக்குத் தொடங்கி அதிகாலை அஞ்சு மணிக்கெல்லாம் முடிச்சோம். இன்னொரு பாட்டுதான் 'மெது மெதுவாய்' வீடியோ சாங். வெளியானது முதலே சினிமா ஏரியாவுல ஒரு 'டாக்' ஆகியிருக்கு. நிறைய ரீச்சும் ஆகியிருக்கு.
`ரச்சிதா மட்டுமில்ல, படத்துல நாலு ஹீரோயின்'
ஆனா சிலர் 'வேணும்னே கிளாமரா எடுத்திருக்காங்க, நெகடிவ் பப்ளிசிட்டிக்காக இப்படி எடுத்திருக்காங்க என்றெல்லாம் கன்டமேனிக்கு கமென்ட் செஞ்சிட்டு வர்றாங்க. ரச்சிதாவுக்கு எதிராகவும் ஏகப்பட்ட கமென்ட்ஸ் சோஷியல் மீடியாவுல பார்க்க முடியுது. 'இப்படி இறங்கிட்டாங்களே'ன்னு அவங்களைப் பத்திப் பேசறாங்க. அதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/ilr8d58u/398424928_272004518639886_5733594087831074377_A.jpg)
இந்த இடத்துல நான் ஒன்னு சொல்ல விரும்பறேன். படத்தின் கதைக்குத் தேவையானதாகவும், அதை நியாயப்படுத்தவுமே இந்தப் பாடல் காட்சி வைக்கப்பட்டிருக்கு. சொல்லப் போனா இந்தக் காட்சி படத்துக்கு அவசியமும் கூட. படத்தின் இயக்குநர்கிட்ட நீங்க பேசினா, அதைச் சரியா விளக்குவார். பாட்டுக்கு கோரியோ பண்ணினவங்கிற முறையில என்னாலயும் வர்ற விமர்சனங்களைப் புறந்தள்ள முடியாததால்தான் பேசறேன். சினிமாவுல கிளாமர் சாங் இடம்பெறுவதெல்லாம் வழக்கமானதுதான். ஆனா சிலர் அவசியமில்லாத இடங்கள்ல திணிக்கறப்ப அதுபத்தி விமர்சனத்துக்குள்ளாகுது.
'மெது மெதுவாய்' பாடல் காட்சிப்படி பாலா ஒரு டாக்டர். அன்னைக்கு விடுமுறை தினம்கிறதால க்ளினிக் லீவு. ரிசார்ட்ல ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கறார். அந்த நேரத்துல ஒரு எமர்ஜென்சியா அவரைச் சந்திக்கிறாங்க ரச்சிதா. அந்த நேரத்துல மழையில அவங்க நனைஞ்சிட தொடர்ந்து தனியா ரெண்டு பேர் மட்டுமே இருக்கிற அந்தச் சூழல்ல பாடல் காட்சி படமாச்சு. ரச்சிதா மட்டுமல்ல, படத்துல நாலு ஹீரோயின். மருத்துவரான பாலா ஒவ்வொரு பெண்ணையும் ஏமாத்தறவரா இருக்கிறதால அப்படியான காட்சி தேவைப்பட்டுச்சு.
ஆனா சாங் வெளியானதும் அவ்வளவு கமென்ட்டுகள். அதாவது பாடல் காட்சியை மட்டுமே பார்த்துட்டு கமென்ட் செய்யறவங்க படம் பார்க்கிறப்ப திட்ட மாட்டாங்கன்னு நம்பறேன். தவிர ரச்சிதாவை சீரியல்கள்ல ஹோம்லி லுக்ல பார்த்து வந்த ரசிகர்கள் இந்த மாதிரி பார்க்குறப்ப கொஞ்சம் அதிர்ச்சியாகி இருக்காங்கன்னு நினைக்கிறேன். ஆனா ரச்சிதாவும் சரி, பாலாவும் சரி, பாடலுக்கு அப்படியொரு சப்போர்ட் தந்தாங்க. ஒரே நாள்ல ஷூட் பண்ணிட்டோம். இத்தனைக்கும் ரச்சிதாவுக்கு டான்ஸ் அவ்வளவா வராதாம். சின்னதொரு முகச்சுழிப்பும் இல்லாம நல்ல ஒத்துழைப்பு தந்தாங்க அவங்க'' என்கிறார் மானஸ்.
Vikatan Plus
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play