செய்திகள் :

Rain Update: அரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி; எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை?

post image

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, அரபிக் கடலில் இன்று (அக்டோபர் 18) ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Rain Alert
Rain Alert

இதனால், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, அடுத்த 4 நாள்களுக்கு (அக்டோபர் 22 வரை) மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று மேற்கு மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தருமபுரி, சேலம், நாமக்கல்​ ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை: வெளுத்து வாங்கும் கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்! | Album

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை.! சாலைகள், நீர் நிலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளம்.! மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடக்கம்; இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி,தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில... மேலும் பார்க்க

அதிகாலை கொட்டித் தீர்த்த மழை; அரசு மருத்துவமனைக்குள் புகுந்த நீரால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை முடிந்த நிலையில் இன்று முதல் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை விட்டு விட்டு பெய்த... மேலும் பார்க்க

கனமழை: இன்றும், நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்? -சென்னை வானிலை மையம் அப்டேட்

இன்று தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைப்படி, ஆரஞ்சு அலர்ட் இன்று திருநெ... மேலும் பார்க்க

குன்னூர்: விடிய விடிய கனமழை, சாலையில் சரிந்த ராட்சத பாறைகள்; உயிர் தப்பிய பயணிகள்

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றிரவு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள... மேலும் பார்க்க

``இன்று 21 மாவட்டங்களில் மழை'' - IMD வானிலை எச்சரிக்கை; தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை

இன்று அதிகாலை முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, திருச்சி, சிவ... மேலும் பார்க்க