‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் ம...
Rajini:``நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும்" - ரஜினியை சந்தித்த நயினார் நாகேந்திரன்!
திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்துக்கு முக்கிய இடமுண்டு. நடிகர் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். அதற்காக தமிழ், மலையாளம், தெலுங்கு முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
அரசியல் அரங்கிலிருந்தும் பிரதமர் மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்தியாவின் பத்ம விபூசண்! தாதா சாகிப் பால்கே விருது பெற்ற கலைஞன், ஆறிலிருந்து ஐம்பது வரையில் அனைவருக்குமான சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களை இன்று அவர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினேன். அவர் வாழ்த்துக்களைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தேன்!
அரை நூற்றாண்டு காலம் இந்திய திரையுலகை ஆண்ட கலைஞன், நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும் என்றும் அழியாமல் காட்சி தரும் தேசிய நடிகர்! அண்ணன் திரு. ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் பல நூற்றாண்டு காலம் திரை உலகை ஆண்டு தாயகப் பணி ஆற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து, அவரை வாழ்த்தி வணங்குகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...