செய்திகள் :

Ramya Krishnan: ``புகழ் அவரைத் துளிகூட மாற்றவில்லை!" - நினைவுகள் பகிரும் ரம்யா கிருஷ்ணன்

post image

ரம்யா கிருஷ்ணன் தற்போது `ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களை ஒன்றாக இணைந்து `பாகுபலி எபிக்' என்ற டைட்டிலில் முழு நீள திரைப்படமாக இந்த வாரம் ரீ-ரிலீஸ் செய்கிறார்கள்.

Ramya Krishnan
Ramya Krishnan

சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபுவுடனான நேர்காணலில் ரம்யா கிருஷ்ணன் தனது திரை வாழ்க்கை குறித்த பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்த அவர் மறைந்த நடிகை சௌந்தர்யா பற்றியும் அந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

`படையப்பா' படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சியைப் பார்த்து கண்கலங்கிய ரம்யா கிருஷ்ணன், ``நான் 'படையப்பா' உட்பட அவருடன் பல படங்களில் வேலை செய்திருக்கிறேன்.

அவர் மிகவும் இன்னொசென்ட். அழகான குழந்தை போன்றவர் அவர்.

நடிகை சௌந்தர்யா
நடிகை சௌந்தர்யா

அவராகவே சினிமாவில் வளர்ந்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார். புகழ் அவரை ஒரு துளிகூட மாற்றவில்லை.

சௌந்தர்யாவைப் போன்ற அழகான மனிதரை நான் முதன் முதலில் `அமரு' என்ற தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான் சந்தித்தேன்.

அவர் எனக்கு நல்ல நண்பரும்கூட." என்றபடி முடித்துக் கொண்டார்.

ரம்யா கிருஷ்ணனும், சௌந்தர்யாவும் `படையப்பா' , `அமரு', `ஹலோ ப்ரதர்' என்ற மூன்று திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

Bison: ``உன் படைப்பைப் பார்த்து பெருமைப்படுகிறேன்'' - மாரிசெல்வராஜை பாராட்டிய மணிரத்னம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது... மேலும் பார்க்க

பைசன்: 'இயக்குநர் திலகம்' பட்டம் வழங்கிய வைகோ; `அன்புத் தம்பி மாரி செல்வராஜ்’ - பாராட்டிய துரை வைகோ

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி, தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்ட்ஸ் திரில்லர் 'பைசன்' படத்தை அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும் ப... மேலும் பார்க்க

வள்ளுவன்: "மொத்த பட வருமானத்தில் 80 சதவீதம்" - நடிகர்களின் சம்பளம் குறித்து இயக்குநர் R.K.செல்வமணி

விஷால் நடிப்பில் வெளியான 'நான் சிவப்பு மனிதன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த தெலுங்கு நடிகரான சேத்தன் சீனு நடித்திருக்கும் படம் வள்ளுவன். இயக்குநர் சங்கர் சாரதி இயக்கத்தில் உருவாக... மேலும் பார்க்க

Abishan Jeevinth: `டூரிஸ்ட் பேமிலி' இயக்குநருக்கு திருமணம்; BMW கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

`டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருக்கிறார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. அப்படத்தின் வெற்றிய... மேலும் பார்க்க

Ajith Kumar: "அஜித் சாரோட காரை எப்ப வாங்குவீங்க?" - ரசிகரின் கேள்விக்கு நடிகர் ரியோ ராஜ் பதில்

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்க... மேலும் பார்க்க