செய்திகள் :

Ratan Tata: கடைசி வரை இருந்த வளர்ப்பு நாய், சமையல்காரர், உதவியாளருக்கு ரத்தன்டாடா எழுதிய உயில்..!

post image

கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து...

தொழிலதிபர் ரத்தன் டாடா சமீபத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். ரத்தன் டாடாவிற்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. ரத்தன் டாடா எப்போதும் வளர்ப்பு நாய்களுடன் இருப்பார். வளர்ப்பு நாய்கள்தான் அவருக்கு உயிராகும். அவர் தனது வீட்டில் ஜெர்மன் வகையை சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ஆசையாக வளர்த்து வந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனது வளர்ப்பு நாய்க்கு சொத்து எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கிறார்.

மேற்கத்திய நாடுகளில் நாய்களுக்கு சொத்துகளை எழுதி வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில் மிகவும் அபூர்வமாகத்தான் அது போன்று சொத்து எழுதி வைப்பது வழக்கம். ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள உயிலில் தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து எழுதி இருக்கிறார்.

ரத்தன் டாடா

ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய்

டிட்டோ வளர்ப்பு நாயை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தத்து எடுத்துக்கொண்டார். ரத்தன் டாடாவிடம் அதே பெயரில் வேறு ஒரு நாய் இருந்தது. அந்த நாய் இறந்ததை தொடர்ந்து புதிதாக தத்து எடுத்த நாயிக்கு அதே பெயர் சூட்டி வளர்த்து வந்தார். இந்த டிட்டோவை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க உயிலில் சொத்து எழுதி இருக்கிறார். இது தவிர ரத்தன் டாடாவிற்கு கடைசி வரை சமையல்காரராக இருந்த ராஜன் ஷா மற்றும் ரத்தன் டாடாவிற்கு சேவை செய்து வந்த சுப்பையா ஆகியோருக்கும் தனது உயிலில் சொத்து எழுதி வைத்திருக்கிறார். சுப்பையாவிற்கும், ரத்தன் டாடாவிற்கும் இடையே 30 ஆண்டு பந்தம் இருந்தது. ரத்தன் டாடா வெளிநாடுகளுக்கு சென்றால் சுப்பையாவிற்கு உடைகள் வாங்கி வந்து கொடுப்பது வழக்கம்.

ரத்தன் டாடா எண்டோமெண்ட் பவுண்டேசன்

இது தவிர ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனுவிற்கும் உயிலில் சொத்து எழுதி இருக்கிறார். சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனை ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார். அதோடு சாந்தனுவின் ஸ்டார்ட் ஆப் நிறுவனத்திலும் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார்.

Shantanu - Ratan Tata

ரத்தன் டாடா கொலாபாவில் வசித்து வந்த வீடு மட்டும் 10 ஆயிரம் கோடி மதிப்புடையது ஆகும். இது தவிர மும்பை ஜுகுதாரா சாலையில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2000 சதுர அடி கொண்ட கடற்கரையோர பங்களா, 350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்சில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் சொத்துக்கள் இருக்கிறது. ஜுகுவில் இருக்கும் வீடு 20 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கிறது. அந்த சொத்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்த சொத்துக்கள் அனைத்தும் 2022ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா எண்டோமெண்ட் பவுண்டேசனுக்கு மாற்றப்படும். டாடா நிறுவனங்களில் ரத்தன் டாடா பெயரில் இருக்கும் பங்குகள் அனைத்தும் புதிய டிரஸ்டிற்கு மாற்றப்படும்.

ரத்தன் டாடா பல ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார். அவை அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு பவுண்டேசனுக்கு மாற்றப்பட்டு சேவைகளுக்கு பயன்படுத்தப்படும். ரத்தன் டாடா வசித்து வந்த வீட்டில் அவர் பயன்படுத்திய 30க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் இருக்கிறது.

அந்த கார்களை என்ன செய்யலாம் என்பது குறித்து டாடா குடும்பம் பரிசீலித்து வருகிறது. அவற்றை டாடா குரூப் வாங்கி புனே மியூசியத்தில் வைக்கும். அல்லது அவற்றை ஏலம் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரத்தன் டாடா

சொத்துகள் அனைத்தும் சேவைக்காக...

ரத்தன் டாடா தனது வாழ்நாளில் பெற்ற விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் எதிர்கால தலைமுறைக்காக பாதுகாக்கப்படும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. 100 பில்லியன் டாலர் கொண்ட டாடா குரூப் நிறுவனங்களின் தலைவராக ரத்தன் டாடா இருந்த போதிலும் தனக்கென தனிப்பட்ட முறையில் சொத்துகளை பெரிய அளவில் வைத்துக்கொண்டதில்லை. எனவேதான் ரத்தன் டாடா பெயர் ஒருபோதும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் வந்ததில்லை. எப்போதும் தொண்டு மற்றும் நன்கொடை வழங்குவதில் ஆர்வம் கொண்ட ரத்தன் டாடாவின் சொத்துகள் அனைத்தும் இனி சேவைக்காக பயன்படுத்தப்படும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``ரூ.200 செலுத்தினால் சாதி, இருப்பிடச் சான்றிதழ்...'' தூத்துக்குடியில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ளது கொம்பன்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இரண்டும் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு கிராம நிர்வாக அ... மேலும் பார்க்க

Bengaluru: பயணிகளுக்கு கன்னடம் கற்றுக்கொடுக்கும் ஆட்டோ ஓட்டுநர்.. வைரலாகும் புது முயற்சி!

பெங்களூரில் கன்னடம் பேசும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கன்னடம் தெரியாதவர்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் ஒரு ஆட்டோக்காரர்.வட மாநிலத்தில் இருந்து வேலைக்காக பெங்களூரு... மேலும் பார்க்க

Irfan: தொப்புள் கொடி வீடியோ; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான் - நடந்தது என்ன?

தமிழில் பிரபல யூடியூபராக வலம் வருபவர் இர்ஃபான். இவர், யூடியூபில் தனக்கென ஒரு சேனலை வைத்து அதன் மூலம் பல கடைகளுக்குச் சென்று, அங்கிருக்கும் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ செய்து வருகிறார். இவருக்க... மேலும் பார்க்க

``கொலை மிரட்டல்'' மனம் திறந்த சல்மான்; ``அவருக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்'' -முன்னாள் காதலி சோமி

கொலை மிரட்டல்..பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த மாபியா கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கின்றனர். சல்மான் கான் 1998ம் ஆண்டு ரா... மேலும் பார்க்க

Organ Donor: இதயத்தை அகற்றத் தயாரான மருத்துவர்கள்; கண் விழித்த இளைஞர்... அமெரிக்காவில் அதிர்ச்சி!

அமெரிக்காவின் கென்டக்கியில் வசிப்பவர் தாமஸ் டிஜே ஹூவர் (36). இவர் போதைப் பொருளை அதிகமாக உட்கொண்டதால் திடீரென மயங்கி விழுந்தார். உடனே குடும்ப உறுப்பினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோ... மேலும் பார்க்க

``நிறைய திருமணம் செய்து, திருமணத்தின் கடவுளாக வேண்டும்..'' - ஜப்பான் இளைஞரின் இலக்கு!

ஜப்பானின் ஹொக்கைடோவின் வடக்கு மாகாணத்தில் வசிப்பவர் ரியுதா வதனாபே. 36 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வாழ்ந்து வருகிறார். இவரின் பெரும் ஆசை... கனவு... திருமணத்தின் கடவுள் ஆக வேண்டும் ... மேலும் பார்க்க