செய்திகள் :

RCB : 'மும்பையைத் தோற்கடித்து RCB கோப்பையை வென்றால்...' - என்ன சொல்கிறார் டீவில்லியர்ஸ்?

post image

பெங்களூரு அணி முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுவிட்டது. இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் மும்பையும் பஞ்சாபும் இன்று மோதி வருகின்றன. இந்நிலையில், பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் ஆர்சிபி கோப்பையை ஏன் வெல்ல வேண்டும் என பேசியிருக்கிறார்.

AB de Villiers, Virat Kohli - RCB
AB de Villiers, Virat Kohli - RCB

டீவில்லியர்ஸ் பேசியதாவது, 'எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்தால் பெங்களூரு அணி இறுதிப்போட்டியில் மும்பையை விட பஞ்சாபை எதிர்கொள்வதுதான் சாதகமான விஷயமாக இருக்கும். ஆனால், கொஞ்சம் பக்குவமாகவும் யோசிக்க வேண்டும். எந்த அணி தகுதிப்பெறும் என்பது நம் கையில் இல்லை. மும்பை இறுதிப்போட்டிக்கு வந்து அவர்களை வீழ்த்தி பெங்களூரு வெல்லும்பட்சத்தில் அதைவிட சிறப்பான விஷயம் வேறெதுவும் இருக்காது.

மற்ற கோப்பைகளை வென்றிருந்தாலும் ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதும் விராட் கோலியின் விருப்பமாகத்தான் இருக்கும். கோப்பையை வெல்ல அவர் தகுதியானவரும் கூட. ஆர்சிபியின் தொடக்கக் காலத்திலிருந்து அந்த அணியில் இருக்கிறார்.

RCB
RCB

கடினமாக உழைத்திருக்கிறார். அவரின் ஆட்டத்தை நன்றாக தகவமைத்துக் கொள்கிறார். உடற்திறனை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். அணியை முன் நின்று வழிநடத்துகிறார். அவரின் கரியரின் கடைசிக்கட்டத்திலும் இருக்கிறார். இந்த சமயத்தில் கோப்பையை வெல்வது அவருக்கு நிறைவாக இருக்கும். கோலி கோப்பையை வெல்வார் என நம்புகிறேன்.' என்றார்.

RCB : 'இது ஒரு வித்தியாச அணி!' - ஆர்சிபியை இறுதிப்போட்டியில் நிறுத்திய அந்த 3 விஷயங்கள்!.

'இறுதிப்போட்டியில் பெங்களூரு!'ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 2016 சீசனுக்குப் பிறகு பெங்களூரு அணி ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது... மேலும் பார்க்க

Heinrich Klassen : 'குடும்பத்துடன் நேரம் செலவழிக்கப் போகிறேன்!' - ஓய்வை அறிவித்த க்ளாசென்

'ஓய்வை அறிவித்த க்ளாசென்!'33 வயதான தென்னாப்பிரிக்க வீரரான ஹென்றிச் க்ளாசென் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.Klassen'குடும்பத்துடன் நேரம் செலவழிக்க...'இதுசம்பந்தமாக அவர் ... மேலும் பார்க்க

Gukesh vs Magnus Carlsen: குகேஷிடம் முதல்முறையாகத் தோல்வி - ஏமாற்றத்தில் மேஜையில் குத்திய கார்ல்சன்

நார்வே செஸ் தொடர் கடந்த மே 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு உலக சாம்பியன் குகேஷும், முன்னாள் உலக சாம்பியனும், உலகின் நம்பர் ஒன செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் நேருக்கு நேர் மோதினர்.M... மேலும் பார்க்க

'என் மனச நல்லா வச்சுக்குற டீம்ல ஆட நினைச்சேன்...' - கொல்கத்தாவை மறைமுகமாக சாடிய ஸ்ரேயாஸ் ஐயர்?

'பஞ்சாப் வெற்றி!'பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்க... மேலும் பார்க்க