செய்திகள் :

Heinrich Klassen : 'குடும்பத்துடன் நேரம் செலவழிக்கப் போகிறேன்!' - ஓய்வை அறிவித்த க்ளாசென்

post image

'ஓய்வை அறிவித்த க்ளாசென்!'

33 வயதான தென்னாப்பிரிக்க வீரரான ஹென்றிச் க்ளாசென் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

Klassen
Klassen

'குடும்பத்துடன் நேரம் செலவழிக்க...'

இதுசம்பந்தமாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன். இது எனக்கு சோகமான நாள்தான். ஆனால், இது சம்பந்தமாக நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் என்னுடைய குடும்பத்தின் வருங்காலத்துக்கும் எது சிறந்ததோ அதை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இது கடினமான முடிவுதான். ஆனாலும் இந்த முடிவினால் நான் ஆசுவாசமடைகிறேன்.

ஒரு சிறுவனாக என்னுடைய தேசத்துக்காக ஆட வேண்டும் என்பதுதான் பெரிய கனவாக இருந்தது. தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்த தொடங்கிய அந்த முதல் நாளிலிருந்தே அதை ஒரு பெருமிதமாகத்தான் நினைத்திருக்கிறேன். தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடிய காலத்தில் நிறைய நல்ல நட்புகளையும் உறவுகளையும் சந்தித்திருக்கிறேன். என் வாழ்க்கையையே மாற்றிய மனிதர்களை இங்கேதான் சந்தித்திருக்கிறேன்.

Klassen
Klassen

அவர்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்வேன் என தெரியவில்லை. நான் தென்னாப்பிரிக்க அணியின் ஜெர்சியை அணிந்ததன் பின்னால் நிறைய பயிற்சியாளர்களின் பங்களிப்பு இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.

Klassen
Klassen

தென்னாப்பிரிக்காவின் இலச்சினை பொறித்த ஜெர்சியை அணிந்து ஆடியதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவம் என நினைக்கிறேன். இனி என்னுடைய குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என நினைக்கிறேன். தென்னாபிரிக்க அணியின் ஆதரவாளனாக எப்போதும் இருப்பேன். எனக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி.' எனக் கூறியிருக்கிறார்.

Virat Kohli : 'நாங்க 3 பேரும் உயிரைக் கொடுத்து ஆடியிருக்கோம்..' - நெகிழ்ந்த விராட் கோலி!

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது பெங்களூரு அணி. அந்த அணியின் 18 ஆண்டுகால ஏக்கம் தீர்ந்திருக்கிறது. இந்த சீசனை கோலிக்காக வெல்ல வேண்டும் என்பதே அந்த அணிய... மேலும் பார்க்க

RCB : ''பஞ்சாபை வீழ்த்த இப்படித்தான் திட்டமிட்டோம்!'' - புவனேஷ்வர் குமார்

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது. Bhuvaneshwar Kumar - RCB... மேலும் பார்க்க

Shreyas Iyer : 'ப்ளான்லாம் ரெடி... செயல்ல காட்டுறோம்!' - டாஸில் ஸ்ரேயாஸ் ஐயர் உறுதி!

'இறுதிப்போட்டியின் டாஸ்...'ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் அஹமதாபாத் மைதானத்தில் மோதவிருக்கின்றன. இந்தப் போட்டிக்கான டாஸ் நடந்து முடிந்திருக்கி... மேலும் பார்க்க

IPL 2025 Finals : 'இறுதிப்போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? - விதிகள் என்ன சொல்கிறது?

'இறுதிப்போட்டி...'ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் இன்று அஹமதாபாத் மைதானத்தில் மோதவிருக்கின்றன. ஆனால், அஹமதாபாத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் வெளியாகியிரு... மேலும் பார்க்க

சிலையின் கால்களை முத்தமிட்ட அஜித் - யார் அந்த விந்தை மனிதர்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க