Robo Shankar: ``என்னுடைய அடுத்த படத்திற்கு ரோபோ சங்கரை ஒப்பந்தம் செய்திருந்தேன்!'' - டி.ராஜேந்தர்
உடல்நலக் குறைவால் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமாகியிருக்கிறார். அவருடைய மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அவருடைய உடல் சென்னை வளசரவாக்கத்திலுள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
திரைத்துறையினர் பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் மற்றும் இயக்குநர் டி. ராஜேந்தர், ரோபோ சங்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இரங்கல் தெரிவித்த டி.ராஜேந்தர், "தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நீங்காத இடத்தைப் பிடித்த வரலாற்று நாயகர்கள் என்றால் அது பொன்னர் - சங்கர்தான்.
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் என்றால் அவர்தான் ரோபோ ஷங்கர்.
தனது நடிப்பாற்றலாலும், உடல்மொழியாலும், நடனத்தாலும் ரசிகர்களின் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொண்டவர். அவருடைய உயிரை காலம் ஏன் இவ்வளவு சீக்கிரமாக வந்து எடுத்துக்கொண்டு சென்றது எனத் தெரியவில்லை.

சமீபத்தில்தான் நான் இயக்கப்போகும் படத்தில் அவரை நடிக்க வைப்பதற்கு நான் பேசி வைத்திருந்தேன். சொல்லப்போனால், ஒப்பந்தம்கூட செய்து வைத்திருந்தேன்.
இந்நிலையில் அவருக்கு இப்படியொரு நிலைமையா! நெஞ்சம் பொறுக்கவில்லை. பழகுவதற்கு அவர் அன்பானவர், பண்பானவர், பாசமானவர்.
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...