செய்திகள் :

Rohit Sharma Speech: ``இந்த அணி என்னை நம்புகிறது"- நெகிழ்ந்த ரோஹித்

post image

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. டி20 உலகக்கோப்பையை வென்ற எட்டே மாதத்தில் இந்திய அணி இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.

விராட்

ரோஹித் சர்மா பேசியதாவது, ``நாங்கள் தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தையே ஆடியிருக்கிறோம். இந்தப் போட்டியை வென்றதிலும் மகிழ்ச்சி. நீங்கள் பரிச்சார்த்தமாக சில முயற்சிகளை செய்து பார்க்கையில் அணி நிர்வாகம் உங்களை நம்ப வேண்டும். ஓடிஐ உலகக்கோப்பையின் போது டிராவிட்டும் என்னை நம்பினார். இப்போது கம்பீரும் என்னை நம்புகிறார். இந்த பிட்ச்சின் இயல்பைப் புரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். முதல் சில ஓவர்களில் அதிரடியாகவே நினைத்தேன்.

நான் சீக்கிரமாகவே கூட அவுட் ஆகியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், நீண்டகால அடிப்படையில் நான் ஆடும்விதம்தான் அணிக்கு உதவியிருக்கிறது. நீண்ட பேட்டிங் லைன் அப்பும் டாப் ஆர்டர் வீரர்களுக்கு ஒருவித சுதந்திரத்தையும் சௌகர்யத்தையும் கொடுத்திருக்கிறது.' என்றார்.

மேலும் பேசியவர், 'மைதானத்துக்கு வந்து எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. இது எங்களின் சொந்த மைதானம் இல்லை. ஆனால், இவர்கள் சொந்த மைதானம் ஆக்கிவிட்டார்கள். இந்த மாதிரியான பிட்ச்களில் ஸ்பின்னர்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும். அவர்கள் மீதான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். தொடர் முழுவதும் சீராகவே பந்து வீசியிருக்கிறோம்.

ரோஹித்

எங்கள் அணியின் ஒவ்வொரு பேட்டரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து ஆடியிருக்கிறார்கள். வருணைப் பற்றி பலமுறை பேசிவிட்டேன். இந்த மாதிரியான பிட்ச்களில் பேட்டர்களை வற்புறுத்தி ஆட வைத்து விக்கெட் எடுக்க வேண்டும். அதை அவர் சிறப்பாக செய்தார். ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு பெரும்பலத்தை கொடுக்கிறது.' என்றார்.

Rohit: லாய்ட், பாண்டிங், தோனி... எலைட் லிஸ்டில் ரோஹித் - ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ஹிட்மேன்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி நேற்று நியூசிலாந்தை வீழ்த்தி, 2000-ம் ஆண்டில் இதேபோன்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்வியைச் சரிகட்டியது.இந்தத் தொடரில் இறுதிப்போட்டிக்கு ... மேலும் பார்க்க

Virat Kohli: `ஷமியின் தாயார் பாதம் தொட்டு நெகிழ்ந்த விராட் கோலி' - இணையத்தில் வைரலாகும் வீடியோ

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி மூன்றாவது முறையாக (2002-ல் மட்டும் இந்தியாவும் இலங்கையும் கோப்பையைப் பகிர்ந்துகொண்டன) மகுடம் சூடியிருக்கிறது. துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்ட... மேலும் பார்க்க

Mitchell Santner : ``நாங்கள் மிகச்சிறந்த அணியிடம் தோற்றிருக்கிறோம்" - தோல்வி பற்றி சாண்ட்னர்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

IND vs NZ: ``ஒரு அணியாக நிறைய சவால்களையும் அழுத்தங்களையும் சந்தித்திருக்கிறோம்'' - கே.எல்.ராகுல்

பரபரப்பாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. ரோகித் சர்மா2013க்குப் பிறகு மீண்டும் இந்திய... மேலும் பார்க்க

IND vs NZ: ``கே.எல். ராகுல் ஆடுவதைப் போன்ற ஷாட்களை வேறு யாராலும் ஆட முடியுமா!'' - ஹர்திக் பாண்டியா

பரபரப்பாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றிருக்கிறது. Rohit SharmaIND vs NZ: `பதறவைத்த நியூசிலாந்து; பதிலடி தந... மேலும் பார்க்க

Virat Kohli : ``நண்பர் வில்லியம்சனை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது; ஆனாலும்..." - கோலி நெகிழ்ச்சி

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க